1306 Trouble in losing
When we
Search for peace
There are many
Ways for us to get it
It is better
To leave
According to
Everyone’s choice
Many found
After searching after God
Few attained it
By seeking in nature
Many lost it
By seeking
In impermanent
Pleasures in life
Without having
Any outside noise
Without having
The noise of senses in the mind
When we reach
The nature of stillness
Surely peace
Will be there
Once we
Found peace there
There is no
Need to tell about it
There is no
Name for it
Which transcends?
Language and senses
But the impact
Of peace
Will be there
Permanently in our lives
Whatever might be?
The situation
That experience
Will be there always
Unless we
Lose it on our own
It won’t go
On its own
But if we
Search for it again
It won’t be
Easily available to us
Though this
Looks contradictory
There is
Some truth in this
Unless we
Understand it
However other explains
We won’t understand it
If we continue
To protect it
There is no limit
For the benefit that we receive
But once we lost it
And if we search for it
There won’t be
Any end to the troubles
Gurukulam 26-11-2021, 11.15 p.m.
Contradiction is part of life. Though we try to resolve it by any means—practical or philosophical, still it is going to glare in our lives in various forms. The best practical solution is ‘try to live with it, by adjusting for survival. Philosophical response might give an intellectual explanation—about it or how to resolve it, but it won’t give an answer for survival. For example take for Mukti [salvation], ‘once saved, ever remain saved’ and ‘though saved still one needs to work out one’s own salvation with fear and trembling’ and ‘we are saved; being saved and will be saved’. But the bhakta of the Lord is never going to live out her mukti by analysing these various theological issues but enjoying her mukti each day in the Lord accepting all these theological contradictions. The same is the case with the ‘peace of mind’ which the Lord gives. It will be there with us to guide at the same time by our own rebellious nature we have the choice to lose it. When I was reading Vincent’s book on Gandhi in which he tries to resolve the contradiction about Ahimsa according to Gandhiji’s view in his commentary on Gita I thought about my own experience with the Peace which the Lord gave me.
1306 இழந்தால் தொல்லை
அமைதி தேடி
அலைந்திடும் போது
அதைப்பெற நமக்குப்
பலவழி உண்டு
யாருக்கு எது
தேவை என்று
அவரவர் முடிவுக்கு
விடுவது நன்று
இறைவனில் தேடி
அடைந்தவர் உண்டு
இயற்கையை நாடிக்
கண்டவர் உண்டு
நிரந்தரம் இல்லா
சுகங்களில் தேடி
அமைதி இழந்தவர்
ஆயிரம் உண்டு
புறம்பே ஓசை
ஏதும் இன்றி
புலங்களின் ஓசை
மனதிலும் இன்றி
சலனம் இல்லா
நிலையை அடைய
அங்கே அமைதி
நிச்சயம் உண்டு
அமைதி அங்கே
கண்ட பினாலே
அதைப்பற்றிக் கூற
அவசியம் இல்லை
புலனை பொறியை
மொழியைக் கடந்த
அந்த நிலைக்குப்
பெயரும் இல்லை
ஆனால் அதனின்
தாக்கம் மட்டும்
நிரந்தரமாக நம்
வாழ்வினில் இருக்கும்
சூழ்நிலை எதுவாய்
இருந்த போதும்
அந்த உணர்வு
நிலைத்தே நிற்கும்
நாமாய் அதனை
இழப்பது அன்றித்
தானாய் அதுவும்
நீங்கிச் செல்லாது
ஆனால் அதனை
மீண்டும் தேட
எளிதாய் நமக்கு
வசப்படாது
முரணாய் இது
தோன்றினாலும்
முற்றாய் இதிலே
உண்மை இருக்கு
தானாய் நமக்குப்
புரியா வரையில்
யார் சொன்னாலும்
விளங்கி விடாது
பெற்ற அதனைப்
பேணிக் காக்க
அடையும் நன்மைக்கு
எல்லை இல்லை
அதனை இழந்து
மீண்டும் தேட
வந்திடும் தொல்லைக்கு
வரையரை இல்லை
குருகுலம், 26-11-2021, இரவு, 11.15
The post Bhakti Theology Song 1306 appeared first on Dayanand Bharati.