1307 Nothing to brag [for you]
What is there?
For you to brag
What do you think?
In your mind
It is natural for me
That I don’t know [many things]
But it is artificial to claim
That you don’t know [anything]
It is natural
For human
To put a mask
And live
But there is
No such need for you
Therefore you’re this act
Looks not good
All your mischief
May be acceptable to others
But you know well that
I won’t accept them
There is no need
For the world
To know
About us
What is there?
To worry
When you are for me
And I am for you
What is there?
To say anything new
But if you refuse to accept
I have alternative means
Should I go?
To that extreme
And is there any need
For me to say that to you
Can you
Deny that
Separation even for a second
Will remain as a Yuga
Why still
Remain upset
It is good for us
To live without separation
Nothing for you to
Brag in separation
And I don’t have
Energy to accept it
Gurukulam, 30-11-2021, 10.30 p.m.
As I was in a mood to tease the Lord I wrote this song in the viraha bhakti [love in separation] genre. I don’t know the reason for this. Others might have various interpretations about it or read some other thing in my personality. But in bhakti, celebrating the relationship with the Lord by writing songs in different genres is quite natural for a bhakta. Outsiders cannot understand unless they inherited such bhakti tradition from their culture and tradition.
1307 பெருமை இல்லை
இதிலென்ன பெருமை
உனக்குமே இருக்கு
என்னதான் உனது
மனதின் கணக்கு
எனக்குப் புரியாது
என்பது இயற்கை
உனக்குத் தெரியா
தென்பது செயற்கை
முகத்திரை போட்டு
வாழ்வது என்பது
மனிதர்க்கு உள்ள
இயற்கை குணமிது
அந்தத் தேவையோ
உனக்குமே இல்லை
அதனால்உன் நடிப்பு
சரியாய் இல்லை
உனது ஜாலம்
பிறரிடம் செல்லும்
என்னிடம் நடக்காது
உனக்குமே தெரியும்
ஊருக்கு உலகுக்குத்
தெரிய வேண்டிய
தேவை நமக்கு
என்றுமே இல்லை
உனக்கென நானும்
எனக்கென நீயும்
இருக்கும் போது
எதைப்பற்றிக் கவலை
புதிதாய் சொல்லிட
இனியென்ன இருக்கு
புரிந்திட மறுத்தால்
வழிவேறு இருக்கு
அந்த எல்லைக்குப்
போகவும் வேண்டுமோ
உனக்கதை நானும்
சொல்ல வேண்டுமோ
ஒருநொடிப் பிரிவும்
யுகமென இருக்கும்
அதனை மறுக்க
உனக்கு முடியுமா
இத்தனை சொல்லியும்
இனியென்ன பிணக்கு
பிரிவின்றி வாழ்வதே
நல்லது நமக்கு
பிரிவிலே பெருமை
உனக்குமே இல்லை
அதைத்தாங்க சக்தி
என்னிடம் இல்லை
குருகுலம், 30-11-2021, இரவு, 10.30
The post Bhakti Theology Song 1307 appeared first on Dayanand Bharati.