அளந்துவச்சான்
ஆட்டுக்கு வாலையும் அளந்துவச்சான்
அதுபோல் எந்நிலை புரியவச்சான்
இறுமாப்பான இதயம் வேண்டாம்
ஆணவம் கொண்ட பார்வைவேண்டாம்
தேவையற்ற செயல்களையும் என்
தலைமேல் இழுத்துப் போடாமல்
முடிஞ்சதை செய்ய தெரிஞ்சிக்கணும்
முடியா செயல்களை மறந்திடணும்
தனது எல்லையைத் தெரிஞ்சிக்கணும்
அதற்குள் ஆடப் பழகிக்கணும்
எல்லையைத் தாண்டிப் போகாதே
எடுத்தேன் கவிழ்த்தேன் என்காதே
வேண்டா செயல்களை செய்தாலே
வீணாய்ப் பாரமும் பெருகிவிடும்
இறுதியில் காரியம் கெட்டுவிடும்
எவருக்கும் பயனின்றி ஆகிவிடும்
உதவி என்று வரும்போது
உன்னால் முடிந்ததை செய்துவிட்டு
வீணாய் வாக்கும் கொடுக்காதே
வம்பில் போய்பின் மாட்டாதே
முடியா செயல்களில் தலையிட்டால்
முதலுக்கே மோசம் வந்துவிடும்
பிறருக்கும் தொல்லை ஆகிவிடும்
வீண்பேச்சாய் ஏச்சாய் மாறிவிடும்
மத்திகிரி, 5-1-18, மதியம், 2.10, சங். 131.1b