நல்லதே நடக்கட்டும்
நல்லதே நடக்கட்டும்
நன்றாக இருக்கட்டும்
நம்மைச் சுற்றியுள்ளோர்
நலமாக வாழட்டும்
நாலுபேர் வாழ்ந்தால்
நாமுமே வாழலாம்
நாட்டையும் வீட்டையும்
நலமாகக் காக்கலாம்
ஊரோடு நாமுமே
ஒத்துமே வாழ்வதால்
உறவாடிப் பிறரோடு
மகிழ்வாக இருக்கலாம்
கூடிநாம் வாழ்ந்தால்
நன்மையையும் கோடிதான்
குழுவாக இணைந்தாலே
வலிமையையும் உண்டுதான்
பிறப்பிலும் இறப்பிலும்
உதவியும் தேவைதான்
பிறரோடு வாழ்வதில்
நிறைவுமே உண்டுதான்
இதையும் எண்ணியே
இசைவோடு வாழ்வோம்
இகத்தின் வாழ்விலே
நன்மையைத் தேடுவோம்
மத்திகிரி, 3-4-18, இரவு 11.10௦