- It is your responsibility
You alone gave a stable life
You alone gave an unstable heart (mind)
In this stable life due to unstable heart
Every day becomes a struggle
Tough I have intellect I don’t have the strength
Though I have bhakti I don’t get release/deliverance (from burden)
Though become a sannyasi responsibilities are not coming down
I become weak and there is no response from you
I don’t know which one to renounce
Once accepted the responsibility denying is not correct
But I don’t understanding my dharma (of a sannyasi) properly
And it is not correct on your part not to make it clear
You alone showed this is my duty/dharma
You also told the way to accomplish it
Instead of standby you came along with me and helped
Through your grace you also upheld me
Yet I cannot do it any more
O Lord beyond this it is not possible for me
I neither have strength in my body or courage in my heart
I cannot struggle continuously
I cannot run away from my responsibility
I cannot also deny it from my heart
I do as much as I could do
Rest I hand over to you
This very life is given only by you
This very heart is given only by you
Either it is a stable life or unstable heart
It is your responsibility to take care of it which is given by you.
03-09-2014. Gurukulam. 4.30 a.m.
As I wrote the previous song, I thought what is my dharma as a sannyasi? Though others may rightly say that as a sannyasi I need not take care of my mother. Likewise I need not go beyond my limitation to take care of this building and property. But my bhakti in the Lord introduces new value which may not in my (Hindu) worldview. It is God who gave this new life, a stable life in Him and also my unstable mind—which tries to justify running away from responsibility in the name of my dharma as a sannyasi. Then I wrote this song immediately.
3-9-2014. Gurukulam.
- உன்பொறுப்பு
நீயே தந்தது நிலையான வாழ்வு
நீயே தந்தது நிலையில்லா மனது
நிலையான வாழ்விலும் நிலையில்லா மனதினால்
நாளும் போராட்டம் என்பதே ஆனது
புத்தி இருந்தாலும் சக்தி எனக்கில்லை
பக்தி இருந்தாலும் முக்தி கிடைக்கல்லை
துறவரம் பூண்டாலும் பொறுப்பு குறையல்லை
துவண்டே போகின்றேன் உன்னிடம் பதிலில்லை
துறப்பது எதையென்று எனக்கும் புரியல்லை
பொறுப்பை ஏற்றபின் மறுப்பது சரியில்லை
ஆயினும் என் அறம் சரியாகப் புரியல்லை
அதை நீ கூற மறுப்பது சரியில்லை
கடமை இதுவென நீயே காட்டினாய்
கடமை நிறைவேற்ற வழியும் கூறினாய்
ஒதுங்கியே நிற்காமல் உடன்வந்து உதவினாய்
உன்னருள் கொண்டு என்னையும் தாங்கினாய்
ஆயினும் என்னால் இனியும் முடியாது
ஐயனே இதற்கு மேலே இயலாது
தேகத்தில் தெம்பில்லை மனதிலே துணிவில்லை
தொடர்ந்து என்னாலே போராடா முடியல்லை
பொறுப்பை உதறிப் போகவும் முடியாது
மறுக்க என் மனதாலும் ஆகாது
என்னால் முடிந்ததை நானும் செய்கின்றேன்
எஞ்சிய பொறுப்பை உன்னிடம் தருகின்றேன்
நீதான் தந்தது என் இந்த வாழ்வு
நீயே தந்தது என் இந்த மனது
நிலையான வாழ்வோ நிலையில்லா மனமோ
தந்ததைக் காப்பது இனிஉன் பொறுப்பு
03-09-2014. குருகுலம். காலை 4.30