256 Accompany me
Come along with me and become my companion
And protect me from the suffering not attacking me
And take care of me so that I won’t fall
Whatever might be the troubles that come!
Give me your grace and safeguard me
As you gave yourself along with Grace
Take care of me and lord over me
And come along with me in everyday life also
Help me and give me new life to me
Give me strength even though I become physically tired
And redeem me by giving many friends
And walking along with me you also toil with me
Encourage me and give me your shoulders
And protect me by fulfilling all my needs
Take me with you by giving your company
So that I won’t stand still with bewilderment
I do my best
As I gave up my ego
And I toil along with you
So that you will finish all the pending works
23-10-2014, Gurukulam.
As so many works are pending before I return back to Mathigiri, when I went for my evening walk I was thinking how God has helped me so far and will be with me to complete the job which he has already began and working along with me.
256 உடன்வருவாய்
துணை வருவாய் எனக்கு துணையாவாய்
துன்பங்கள் தொடராமல் அணையிடுவாய்
தொடரும் துன்பங்கள் எவையே ஆயினும்
துவண்டு நான் வீழாமல் காத்திடுவாய்
அருள்தருவாய் என்னை ஆதரிப்பாய்
அருளொடு உன்னையே உவந்தளிப்பாய்
ஆதரிப்பாய் என்னை ஆட்கொள்வாய்
அன்றாட வாழ்விலும் உடன்வருவாய்
உதவிடுவாய் எனக்கு உயிர்ப்பளிப்பாய்
உடலாலே சோர்ந்தாலும் பெலன் கொடுப்பாய்
உறவுகள் பல தந்து உய்விப்பாய்
உடன்வந்து என்னுடன் உழைத்திடுவாய்
தேற்றிடுவாய் எனக்கு தோள்கொடுப்பாய்
தேவைகள் நிறைவேற்றி காத்திடுவாய்
திகைத்து நான் நின்று கலங்கிடாமல்
துணையாக உன்னுடன் அழைத்துச் செல்வாய்.
எனதென்ற எண்ணத்தை அழித்ததினால்
என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன்
எஞ்சிய அனைத்தும் நீயே முடிக்க
இணைந்து உன்னுடன் பணிபுரிகிறேன்.
23-10-2014, Gurukulam.