340. Inherent nature
Negative views
So many arguments
When come out of me
What can I do?
Though my heart longs
To seek goodness
And to do good
The truth is different
With much irritation
And quickly reacting
If argue often
It becomes too dangerous.
The buddhi is telling
To keep silence
And to listen others
And to have patience
Yet the inherent nature
Remains the same
Though often get hurt
It refuses to get changed
What else can I do?
To whom should I listen?
What should I do?
To change this nature?
You often advise me and
Become tired of giving such advice
Once I return back after wounded
You apply balm on the wound
Though the body is worn out
And lost my strength
This inherent nature will
Never dry up.
Ok let it be
Let it be according to your will
Why should we now
Argue over it?
29-9-15, Mathigiri, 2.45 pm.
We Indians love to argue, even knowing that there is no use in it. I am one such. Several times, after a big argument, I regret that I have wasted all our time. But this nature is not going to change that much easily. As I was reflecting on this nature, I spent lots of time reasoning and justifying why I am correct and need to argue. At the end I said to the Lord ‘Ok. Why should we both argue over it and let your will be done.’ Then I wrote this song.
340. பிறவிக்குணம்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணில்லா வாதங்கள்
என்னிலே தோன்றும்போது
என்னதான் செய்வது?
நன்மையை நாடத்தான்
நன்மையைச் செய்யத்தான்
உள்மனம் ஏங்கினும்
உண்மை வேறாகுது
ஆத்திரம் கொண்டுமே
அவசரப் பட்டுமே
அடிக்கடி வாதித்தால்
ஆபத்தாய்ப் போகுது
மெளனமாய் இருக்கத்தான்
பிறர்பேசக் கேட்கத்தான்
பொறுமையைக் காக்கத்தான்
புத்தியும் சொல்லுது
ஆயினும் பிறவிக்குணம்
அப்படியே இருக்குது
அடிக்கடி காயப்பட்டும்
தன்னைமாற்ற மறுக்குது
என்னதான் செய்வது
எவர்பேச்சைக் கேட்பது
இந்தநிலை மாறத்தான்
இனிஎன்ன செய்வது?
சொல்லித்தான் பார்க்கின்றாய்
சொலிஓய்ந்து போகின்றாய்
காயப்பட்டு மீண்டும்வந்தால்
கட்டுப்போட்டுக் காக்கின்றாய்
தேகம் ஓய்ந்துபோனாலும்
தெம்பு வற்றிப்போனாலும்
இந்தஎன் குணம்மட்டும்
என்றும் வற்றிப்போகாது
சரிவிடு போகட்டும்
உன்சித்தம்போல ஆகட்டும்
இதற்காக நாமுமே
ஏன்வாதம் செய்யணும்?
29-9-15, மத்திகிரி, மதியம் 2.45