கொள்கை
கூவி அழைத்தே பலகொள்கையும் பேசுறார்
கூட்டம் போட்டு அதைக் கூறியும் காட்டுறார்
நாடகம் முடிந்து வேடமும் கலைந்த பின்
வேடிக்கைப் பொருளாகி போனதைப் பார்க்கிறார்
உணர்ச்சியின் வேகத்தில் உளறிடும் வார்த்தைகள்
உதவாது என்பதை உணரவும் மறுக்கிறார்
கூட்டத்தோடு நின்று கோஷங்கள் போட்டவர்
கூடியவேகத்தில் களைந்துமே போகிறார்
கொள்கை எதுவென்று கொஞ்சமும் புரியாது
கூறிடும் வழிகளும் முறையாக இல்லாது
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியே
எதையும் சாதிக்க இயலாது போகிறார்
கொண்ட கொள்கையை தெளிவாகப் புரிந்து
கூவி அழைப்பதில் உறுதியாய் இருந்தால்
இறுதிவரை தனித்து இருந்திட நேரினும்
எதிலும் சமரசம் என்றும் செய்திடார்
சரித்திரம் படைப்பதாய் எண்ணி சிலமுறை
சரியாக சிந்திது செயல்பட அறியாமல்
போன போக்கிலே பேசிடும் பேச்செல்லாம்
போய்விடும் காற்றோடு கூட்டமும் போனபின்
கொண்ட கொள்கையை தன்னிலே தொடங்கனும்
தனித்து அதற்கு விலையும் கொடுக்கனும்
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் எல்லாம் ஓய்ந்தபின்
அமைதியாய் அதையும் நடைமுறைப் படுத்தனும்
6-3-16, மத்திகிரி, இரவு 11.00