375 Wont’ I sing?
Won’t I sing you; won’t I sing unto you?
When I am still living on this earth—won’t I sing…?
Unnecessary thoughts and unwanted worries
Not able to drown by pushing me down—won’t I…
The new benefits which you give each day in my life
And unable to count them—won’t I….
By lifting me up the mean one like me
And the way you redeemed me—Wont’ I sing…
Not allowing me to perish with desires of the flesh
The way you gave the seal of Holy Spirit and lord over me—won’t I sing…
Though I sing and praise you by words and language
Still the way you dwell within me in silence—won’t I sing…?
Making me your own and becoming my own
And singing each day with joyful heart—won’t I sing…
Joining with other bhaktas to praise you
By writing new songs each day—wont’ I sing….
22-1-16, (23-1-16) 12.05 am. Mathigiri
Gopalakrishna Bharatiyar’s one of the poem ‘Kaana vendaamo’ is one of my favourite songs. As I often listen to it this night based on the same raga and format I wrote this song praising the Lord.
375 பாடவேண்டாமோ
பாடவேண்டாமோ, உன்னைப் பாடவேண்டாமோ
பாருலகில் நான் வாழ்ந்திருக்கும்போதே–பாட…
வீணான எண்ணங்கள், வேண்டாத கவலைகள்
வீழ்த்தியே என்னைத் தாழ்த்தி அழுத்தாது–பாட…
நித்தம் நீசெய்த புத்தம்புது நன்மைகள்
எத்தனை என்று நான் எண்ணியே மாளாது–பாட…
நீசன் என்னைநீ நேசமாய்க் கைப்பற்றித்
தூக்கி யெடுத்து ஆட்கொண்ட செய்கையை–பாட…
மாமிச சிந்தையால் மாண்டுநான் போகாமல்
ஆவியின் அச்சாரம் தந்தென்னை ஆள்வதை–பாட…
சொல்லாலும் மொழியாலும் போற்றியே துதித்தாலும்
மெளனமாய் என்னுள்ளே வாசம்நீ செய்வதை–பாட…
சொந்தமாய் எனையாக்கிச் சொந்தமாய் எனக்காகி
சித்தம் மகிழ்ந்து நித்தம் துதிதுன்னை–பாட…
பக்தர் பலர்கூடிப் பாடிக் கொண்டாட
புத்தம் புதுப்பாடல் புனைந்துமே தினமுன்னை–பாட…
22-1-16, (23-1-16) இரவு, 12.05, மத்திகிரி