378 Your relationship
Why should I tell it?
To whom should I tell?
Once I realized you
Who dwells within me?
I need not write it on a paper
I need not write any poem about it
I need not get frustrated
‘How to communicate it’.
In order to come unto you
And to remember you each day
I need not sought encouragement or revival
It is enough for me if have your relationship with me
Is there any language
To communicate that: this is it
And by telling which relationship
I should come unto you?
Can I call myself as a sinner?
Or I will address myself as a bhakta
Or I will sing that I am that made man
Who bows at your feet?
Parents have one relationship
Siblings have another one
Relatives have many terms
To address our relationship
All those relationship will get lost one day
In this life on earth
But I don’t find any word to utter
Your relationship which will remain with me till the end.
26-1-16(27-1-16), Mathigiri, 12.10 am.
As I sat for my meditation I said: no more reflection, no more prayer, no more thought, mo more meditation but try to be in the PRESENCE of God. But I cannot continue in that sadhana more than few seconds. Then my mind began to inspire to write this as a poem. Then I said, ‘no more poems, no more writing’. But I cannot get success. Because, as I began to say in my mind ‘why should I write and to whom should I share the relationship between me and the Lord,’ then it began to develop as a song. Accepting my failure, at the same time not ready to give up, I wrote this song, though I will continue this sadhana in the coming days.
378 உன் உறவு
எதற்கு நான் சொல்ல வேண்டும்
எவர்க்கு நான் கூறவேண்டும்
உள்ளிருக்கும் உன்னை நானே
உணர்வினாலே உணர்ந்த பின்னே
ஏட்டிலே எழுத வேண்டாம்
எதுகை மோனை சேர்க்கவேண்டாம்
எப்படி உரைப்பதென்று, இனி
என்னுள்ளே தவிக்க வேண்டாம்
உன்னிடம் நான் வருவதற்கு
உன்னையே தினம் நினைப்பதற்கு
ஊக்கம் ஆக்கம் தேடவேண்டாம்
உன்னுறவு மட்டும் இருந்தால் போதும்
அந்த உறவு இதுதான் என்று
அறிந்துகூற மொழியும் உண்டோ
எந்த உறவைச் சொல்லிநானும்
உன்னிடம் வரவும் வேண்டும்
பாவியென்று சொல்லு வேனோ
பக்தன் என்று கூறுவேனோ
பாதமே பணிந்து நிற்கும்
பித்தன் என்று பாடுவேனோ
பெற்றவர்க்கு ஓர் உறவு உண்டு
உடன்பிறந்தவர்க்கு ஒன்று உண்டு
சுற்ற மென்று கூறுவோர்க்கு
சொல்லப் பல உறவுமுண்டு
அந்த உறவு எல்லாம் ஒருநாள்
அறுந்துபோகும் உலக வாழ்வில்
இறுதிவரை துணையாய் இருக்கும்,
உன்னுறவைக் கூற மொழியே காணும்
26-1-16(27-1-16), மத்திகிரி, இரவு, 12.10