397 Who is your neighbor?
You go and do similarly
To those who are in need—go and do….
They saw the wounded one
But went away as if not noticed it
Unlike them who went away
Without doing anything for him; having mercy—go and do….
A stranger who came on that way
Having compassion on him
Applying oil to cure him
As he has done seva to him—go and do….
In order to show how good is he
And asked the question for others to applaud him
To the one who has a mean mind?
The Lord turned to him and said—go and do….
“Who is your neighbour?
Whom you think is your neighbour
Those who are in need are your neighbours
If you help them they will become your own” —go and do….
Yet he became very sad
As he has desire over his wealth
Though he received the apt answer to his question
Went away as if he didn’t heard, without giving any response (to the Lord) —go and do….
22-3-16, Mathigiri, 2.45 pm.
As I read from Luke 10: 25-37, based on this story I wrote this song.
397 யார் அயலான்?
அந்தப்படியே நீ போய்ச் செய்
அடுத்தவன் தேவைக்கு உதவிசெய்–அந்தப்படி
காயப்பட்டவனைக் கண்டார்
கண்ணை மூடி விலகியே சென்றார்
பாவப்பட்டு இரக்கம் கொண்டு
ஏதுமே செய்யாமல் சென்றவர்போல் அல்லாமல்–அந்தப்படி
அந்த வழிவந்த ஓர் அந்நியன்
அவன்மேல் இரங்கிக் கருணை கொண்டு
எண்ணையும் இட்டுக் காயத்தை ஆற்றி
ஏற்ற உதவிகள் செய்ததுபோல் நீயும்–அந்தப்படி
நல்லவனாய்த் தன்னைக் காட்ட
நாலு பேர்மெச்சக் கேள்வியும் கேட்ட
சின்னத் தனமான சிந்தையும் கொண்ட
சிறுவனை நோக்கி ஐயனும் சொன்னான்–அந்தப்படி
அந்நியன் என்பவன் யாரோ?
உனக் கயலான் என்பவன் எவரோ
தேவைகள் உள்ளோர் அயலாரே
தேடி உதவிட உன்சொந்தம் ஆவாரே–அந்தப்படி
ஆயினும் சோகமே கொண்டான்
செல்வத்தின் மீது மோகமே கொண்டான்
கேட்ட கேள்விக்கு ஏற்ற விடைபெற்றும்
கேளாதவன் போல் பதில் பேசாமல் சென்றான்–அந்தப்படி…
Luke 10:25-37
22-3-16, மத்திகிரி, மதியம் 2.45