480 பறக்காதே
பொறுமை சற்று அதிகம் தேவை
இதைப் புரிந்ததால் உனக்கு நன்மை
பறக்கப் பறக்க ஓடி ஆடி
பதட்டம் அடைந்தால் இலாபம் இல்லை
உனக்கு வயசும் அதிகம் ஆச்சு, அதை
உணர்ந்தால் உனக்கு நன்மையாச்சு
உன் தேகம் தளர்ந்தும் போச்சு
அதை உணரும் நேரம் வந்தாச்சு
குழந்தை குட்டி குடும்பம் இல்லை
கூட்டம் இரைச்சல் வீட்டில் இல்லை
ஏதோ இரண்டு வயத்துக்குப் பொங்க
இத்தனை ஆர்பாட்டம் தேவையும் இல்லை
தொட்டதெற்கெல்லாம் அவசரம் எதற்கு
தேவை இலாத வேலைகள் எதற்கு
அரக்கப் பறக்க செய்த பின்னாலே
அலுத்து சலித்து கொள்வது எதற்கு
வகை வகையான சமையலும் இல்லை
வாயும் ருசியாய் கேட்டவும் இல்லை
வெந்ததைத் தின்று வாயைக் கழுவ
போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை
அமைதியாய் இருந்து பொறுமையாய் செய்து
ஆட்டம் ஓட்டம் சற்றே குறைத்து
பிறருக்கு வீணாய் பாரம் இல்லாமல்
போகிறவரைக்கும் பொறுமையைக் காறு
மத்திகிரி, 15-10-2018, இரவு, 11.30