408 Let it come
Let it come
And what else can I do
Even if anything comes
He is there to give company
He is with me
In each second
And without taking rest
He protects me
He encourages me
And gives strength
And lifts me up
Not allowing me to become tired
Removing the worries
And troubles
He keeps me
As the apple of the eyes
Though the body is worn out
And strength has gone
He promises
To be my companion
Out of tiredness
Though I get depressed
By proper means
He lifts me up
After receiving
All these blessings
Let anything come
What else can I say?
14-4-16, Mathigiri, 1.15 pm.
Again some kind of tiredness preoccupied my mind. I lost interest in every activity. I prefer to remain ‘inactive’, which is also not possible. Then pouring down my tiredness I wrote this song.
408 வருவது வரட்டும்
வருவது வரட்டும்
நானென்ன செய்யட்டும்
வந்தாலும் துணையாக
அவனுமே இருக்கானே
ஒவ்வொரு நொடியும்
என்னுடன் இருக்கிறான்
ஓய்வு ஒழிவின்றி
என்னையும் காக்கிறான்
தைரியம் தருகிறான்
தெம்பும் அளிக்கிறான்
தொய்ந்து போகாமல்
தூக்கியே காக்கிறான்
கவலைகள் போக்கியே
கலக்கமும் நீக்கியே
கண்மணி போலென்னை
வைத்துமே காக்கிறான்
தேகமே தளர்ந்தாலும்
தெம்பும் குறைந்தாலும்
“துணையாக இருப்பேன்”
என்றுமே சொல்கிறான்
சோர்வுற்றுச் சிலநேரம்
மனமும் தளர்ந்தாலும்
ஏற்றபடி என்னை
மீட்டு எடுக்கிறான்
இத்தனை நன்மைகள்
பெற்ற பின்னாலே
எதுவானால் என்ன
வேறென்ன சொல்ல
14-4-16, மத்திகிரி, மதியம், 1.15