Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 444

$
0
0

444 Therefore I am telling

You are the one
Who take care of those?
Who become tired?
Of both body and mind

You are the divine one
Who pour the rain of grace?
To those who refuse to see you
And those who rejoice in you

You are the end of love
Who bestows grace?
To those who refuse to know you
And those who rejected you after knowing

You are the God
Who carries the burden?
Of those who carry
Their burden with much pain

You are the companion
Who come alone on this earth and
Who live alone and
Struggle without any companion

You are the Holy one
Who wipes out the pain of those
Who knows to worship you
Or forget to worship you

You will come silently
And do good to those
Who know how to share (their needs?)
Or to those who forget to share to you

Therefore I come knowing you
And say this
As you gave refuge to me
And I praise you by telling it

14-06-16, Mathigiri, 9.19 pm.

I become tired both in my body and mind today. I want to take some rest. But I am not sure what kind of rest that I need? As long as we live we cannot escape from activities—both in body and mind. So just replacing one with another is not the solution for my problem. I am longing for an ‘action-less action’ which is difficult to comprehend or express. As I was doing some work in the computer, suddenly this thought again came in my mind and stopping that work I wrote this song.

444 அதனால் சொல்கிறேன்

களைத்துப் போனோர்க்கும்
இளைத்துப் போனோர்க்கும்
கைகொடுத்துக் காக்கும்
கருணை தெய்வம்நீ

காண மறுப்போர்க்கும்
கண்டு களிப்போர்க்கும்
கருணை மழைபெய்யும்
கண்கண்ட தெய்வம்நீ

அறிய மறுப்போர்க்கும்
அறிந்தும் மறுப்போர்க்கும்
அருளினை அளித்திடும்
அன்பின் எல்லைநீ

வருந்தியே சுமப்போர்க்கும்
வாடித் தவிப்போர்க்கும்
விரும்பித் தோள்தந்து
சுமக்கும் இறைவன்நீ

தனித்து வாழ்வோர்க்கும்
துணையின்றித் தவிப்போர்க்கும்
தயவுடன் உடன்வந்து
தாங்கிடும் துணைவன்நீ

துதிக்கத் தெரிந்தாலும்
தொழுதிட மறந்தாலும்
துன்பங்கள் துடைத்திட்டுத்
துயர்போக்கும் தூயோன்நீ

சொல்லத் தெரிந்தாலும்
சொல்லவே மறந்தாலும்
சொல்லாமலே வந்து
செய்வாய் நன்மைநீ

அறிந்தே வருகிறேன்
அதனால் சொல்கிறேன்
அடைக்கலம் தந்ததைச்
சொல்லித் துதிக்கின்றேன்

14-06-16, மத்திகிரி, இரவு, 9.19


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles