445 Uncomparable
Is there any comparison
For your unparallel compassion
Is there any other god
Who bestows grace to all?
You become the ocean of grace
And you become the mercy which protects us
You become the compassion to the bhaktas
And you become the redeemer to the sinner
You become the object of my meditation
And you become the shape for all my activities
And you bestowed all blessings
Who come unto you with trust?
You become the path for love
And you become the language of dignity
And you bestowed mukti
To those who worshipped your feet
Becoming simple to the simple
And become Lord for all
And becoming the redeemer to the world
You gave yourself for that
You give grace
And you pour love
And embodying yourself as compassion
You take care of us
Coming and dwelling in me
And lord over me
You bestowed that status
To abide with you always
What else can I say?
Using many words
Nothing is required
To bow at your feet
15-6-16, Mathigiri,7.20 am.
As I was listening one beautiful Tamil devotional song with wonderful music, my spirit lifted to worship the Lord. While I was listening that song, I began to write this song and finished it within five minutes as my worship to Him.
445 ஈடுண்டோ
இணையற்ற கருணைக்கு
ஈடேதும் இங்குண்டோ
எல்லோர்க்கும் அருள்தரும்
தெய்வம்போல் இனியுண்டோ
கருணக் கடலானாய்
காக்கும் அருளானாய்
பக்தர்க்குத் துணையானாய்
பாவிக்கு மீட்பானாய்
சிந்தைக்குப் பொருளானாய்
செயலுக்கு உருவானாய்
நம்பியே வருவோர்க்கு
நலமெல்லாம் நீதந்தாய்
அன்பிற்கு வழியானாய்
பண்பிற்கு மொழியானாய்
பாதமே பணிவோர்க்கு
பதமே நீதந்தாய்
எளியோர்க்கு எளியனாய்
எல்லோர்க்கும் ஈசனாய்
உலகோர்க்கு மீட்பனாய்
உன்னையே நீதந்தாய்
அருளை அளிக்கின்றாய்
அன்பைப் பொழிகின்றாய்
கருணையின் வடிவாகிக்
காத்து வருகின்றாய்
என்னுள்ளே நீவந்து
என்னையே ஆட்கொண்டு
என்றும் உன்னுடன்
இருக்கும் நிலைதந்தாய்
எந்த மொழிகொண்டு
இன்னும் சொல்லிட
ஏதும் வேண்டாமே
பாதம் பணிந்திட
15-6-16, மத்திகிரி, காலை 7.20