448 What is there fore me do further?
What is there for me to do anything further?
and what is there to say more than this?
Even if I continue to plead you
You cannot understand my heart
Why this unnecessary drama
I don’t know what to say further
If you want to keep me unnecessarily
I don’t have any more energy to argue with you
What is there for me to achieve by living
What is there for me to see further
Once your work of redemption is complete
Why should I live unnecessarily?
Am I the one who is carrying the entire burden?
And am I the one who is doing any good or bad
Somehow I kill merely my time
And living as a burden to this earth
Will everything disappear once I have gone?
And do I need to tell this to you
There is none to accompany with me (in my death)
And none has even the courage to come with me even if I ask them
Why do you delay further after knowing this?
Let me come when I have some (physical) strength
I told as much as I know
Rest is your burden, and that too I make clear to you
18-6-16, Mathirigi, 11.10 pm.
Each day in the night after my T.V. news I use to walk for 10 or fifteen minutes in the hall. That time I used to reflect all that I have done that day and assess my life accordingly. This night, as I was walking I felt that there is no reason for me to live any more as I don’t find any purpose in this life. This mood came not out of frustration but with a sober thinking and reflecting the purpose of my life. Then immediately stopping my walking I wrote this poem.
448 இருந்து என்ன செய்ய
இருந்து நானும் என்ன செய்ய
இதற்கு மேலும் என்ன சொல்ல
வருந்தி வருந்தி வேண்டினாலும்
என் மனசும் உனக்குப் புரியல
ஏன் இந்த நாடகம் வீணிலே
என்னதான் சொல்வது தெரியல
வம்பு கட்டி இன்னும் வைத்தால்
வாதிட எனக்குத் தெம்பில்ல
இருந்து என்னத்தச் சாதிக்கணும்
இன்னும் என்னத்தப் பார்க்கணும்
உன்மீட்பின் வேலை முடிந்தபின்
வீணில் எதற்கு இருக்கணும்
நானா பாரம் சுமக்குறேன்
நல்லது கெட்டது செய்யுறேன்
ஏதோ நேரத்தைப் போக்குறேன்
மண்ணுக்குப் பாரமாய் வாழறேன்
நான்போனால் எல்லாம் போயிடுமா
நான் இதை உனக்குச் சொல்லணுமா
கூடவே வந்திட யாருமில்லை
கூப்பிட்டாலும் வரத் துணிவில்லை
தெரிஞ்சபின் இன்னும் தாமதமேன்
தெம்புள்ள போதே வந்துடறேன்
தெரிஞ்ச வரைக்கும் சொல்லிப்புட்டேன்
இனிஉன்பாடு அதையும் சொல்லிவிட்டேன்
18-6-16, மத்திகிரி, இரவு, 11.10