502 non-understandable secret
So many people came
And have done many things
And always filled
My life with many blessings
There is no fault to find in them
And there is nothing for me to complaint (about them)
They remained as
God’s own messengers in my life
I received
More than others
And that is what I am
Sharing through this song
He bestowed even before I thought
Even without questioning me
He gives more
Even before I ask for them
He has some special
Love for me
And don’t ask about it
And that is unnecessary question
Even if I tell about it
You cannot understand it unless you too receive it
Even I don’t know the secret
Behind it so far
But I will tell the means
To get it from Him
And ask without ceasing
Till He reveals it
Mathirigi, 3-9-16, 4.30 am.
I always feel that I am very much blessed by the Lord in so many ways. He sends right kind of people in right time only to bless me even in disguise. Those whom I think are my critics or faultfinders are also a blessing in disguise from God. I don’t know the reason for giving this special blessing only to me. And others too can get it, provided if they continue to ask and recognize it when He bestows to them.
502 புரியாத இரகசியம்
யார் யாரோ வந்தார்கள்
ஏதேதோ செய்தார்கள்
என்வாழ்வில் எப்போதும்
நன்மையால் நிறைத்தார்கள்
குறைசொல்ல ஏதுமில்லை
குற்றம்காண ஒன்றுமில்லை
இறைவனின் தூதராய்
என்வாழ்வில் இருந்தார்கள்
அதிகமே பெற்றேன்நான்
அனைவரைக் காட்டிலும்
அதைத்தான்னே சொல்கிறேன்
இப்பாடல் மூலம்நான்
எண்ணும்முன்னே தந்தானே
ஏனென்று கேட்காமல்
இன்னும்கூட அளித்தானே
நானதைச் சொல்லும்முன்
என்னவோ என்மீது
அவன்கொண்டான் தனியன்பு
ஏனென்று கேட்காதீர்
வேண்டாம் இந்தவீண்வம்பு
சொன்னாலும் புரியாது
தன்னாலே பெறும்வரை
எனக்குமே புரியலை
இரகசியம் இதுவரை
ஆயினும் சொல்கிறேன்
அதைப்பெறும் வழிமுறை
ஓயாமல் கேளுங்கள்
அவனதைக் கூறும்வரை
மத்திகிரி, 3-9-16, காலை 4.30