503 Unnecessary contention
What happened to you?
And why you have this contention with me?
Each day I will come to your holy presence
And will receive your grace even demanding it
Is it necessary to have such contention every day?
You alone have to decide about it
What can I do further about it; that is my situation?
What else can I say to you?
Remaining indifferent is
Possible for human beings
But it is not possible for you
Who created us; do I need to tell this to you?
Yesterday and tomorrow
Is calculation of time for human beings?
But who can come and tell this you
Who has transcended all kinds of time limit?
If I come and seek something new
Then you can give me advice
But I am only asking which you have bestowed me from the beginning
And what kind of contention do you have in it?
Whatever you have to give me today, give in time
I have many works on my hand
I don’t know when I can come again to you
That also you know very well
Once you know about me
Don’t further delay
Why you didn’t learn so far
Though you had experienced the same in the past?
Mathigiri, 4-9-16 10.15 am.
The freedom that I enjoy with the Lord—to rebuke, warns, to crack jokes and to demand is unique one in my bhakti. I expect Him to understand me, my nature, and my limitation and act accordingly. This song reflects such freedom that I enjoy with Him. When I demand He has to give without giving some excuse—even that could be a ‘no’.
503 வீணான வழக்கு
என்னாச்சு இன்று உனக்கு
என்மீது ஏனிந்த வழக்கு
அன்றாடம் உன் சன்னிதி வருவேனே
அடிம்பிடித்தேனும் அருளைப் பெறுவேனே
தேவையா தினம் இந்தப் போராட்டம்
என்பதை நீயேதான் சொல்லணும்
நானென்ன செய்யட்டும் எந்நிலை அப்படி
வேறேது உனக்கும் சொல்லட்டும்
பட்டும் படாமலும் இருப்பதென்பது
மனிதர்க்கு மட்டுமே ஆகும்
படைத்த உனக்கு முடியாதென்பது
நானுமா உனக்குச் சொல்லட்டும்
நேற்று-நாளை என்பது எல்லாம்
மானிடர்க்கு உள்ள கணக்கு
காலம்-நேரம் கடந்த உனக்கு
யாரினி வந்துமே சொல்வது
புதிதாய் ஏதும் கேட்டுவந்தால்
புத்தியும் சொல்லலாம் எனக்கு
ஆதியில் தந்ததை அன்றாடம் கேட்கிறேன்
அதில் உனக்கென்ன வழக்கு
இன்று தருவதை நேரமே தந்திடு
எத்தனையோ வேலைகள் எனக்கு
எப்போதும் உன்னிடம் வருவதென்பது
இயலாது தெரியும் உனக்கு
என்னைப் பற்றித் தெரிந்தபின்னும்
இன்னுமே செய்யாதே தாமதம்
எத்தனையோ முறை பட்டுத்தெரிந்தும்
ஏனின்னும் புரியலை உனக்கும்
மத்திகிரி, 4-9-16 காலை 10.15