504 My duty
Let anyone talk whatever they want
And I won’t be afraid about them
And I have no hesitation to share
What He has done to me
What God has done to me?
Nobody can understand; this is the only truth
And they will be surprised to know
What He has done to me
The one who has redemption as His nature
Came among us to seek and redeem us
Yet as I never understood this
In vain I searched it in various places
Realizing that there is no more strength
I get struck in one place
And realizing that this is proper time
He came seeking after me on His own
Not knowing who He is
I cried by sharing my problem with Him
And as my burden is gone that time, experiencing it
I asked Him “Who are You”?
“I am the guru whom you are searching so far
And I am the God who lives eternally”, He responded
As the Truth dawned that time like a lightening
I surrendered at His feet as my only refuge
Why should I feel shy to share this?
And why should afraid about others unnecessarily
To accept or reject is their right
But sharing it become my duty
Mathigiri, 4-9-16, 10.45 am.
I never feel hesitant to share why Muktinath is my guru and how he found me and accepted me is a privilege to share. Of course I won’t artificially create any situation to share my journey in the Lord. But when opportunity comes, I won’t hesitate whoever it might be.
504 என்கடமை
யாரென்ன சொன்னாலும் சொல்லட்டுமே
வீணாக நான்கொள்ளேன் அச்சமுமே
எனக்குச் செய்ததை எடுத்துச் சொல்வதில்
எனக்கில்லை ஒருநாளும் சங்கோச்சமே
என்னென்ன செய்தான் எனக்கு என்பதை
எவரும் அறியார் என்பதே நிச்சயம்
ஏனதைச் செய்தான் என்பதை அறிந்தால்
எவரும் கொள்வார் உண்மையில் ஆச்சர்யம்
தேடியே மீட்பதைக் குணமாகக் கொண்டவன்
தேடித்தான் வந்தான் மீட்கவே நம்மிடம்
ஆயினும் அதனை அறியாது போனாதால்
அலைந்து திரிந்து தேடினேன் பல இடம்
இனித் தெம்பில்லை என்பதை உணர்ந்து
ஓய்ந்து போய் உட்கார்ந்தேன் ஓரிடம்
தருணம் இதுவே என்பதை அறிந்து
தானாக வந்தானே தேடியே என்னிடம்
யாரவன் என்பதை நானும் அறியாமல்
என்குறை சொல்லி அழுதேன் அவனிடம்
அந்நேரம் என்பாரம் போனதை உணர்ந்து
“யார்நீ” என்றுமே கேட்டேன் அவனிடம்
“நீதேடும் ஆசான் நானுமே” என்றான்
நித்தமும் வாழ்ந்திடும் தெய்வமும் என்றான்
அந்நேரம் உண்மை மின்னலாய்த் தோன்ற
அடைந்தேன் “கதிநீயென” அவன்பாதம் நானும்
இதையே சொல்லிட எனக்கென்ன வெட்கம்
ஏன்நான் கொள்ளணும் வீணான அச்சம்
ஏற்பதும் மறுப்பதும் அவர் உரிமை ஆச்சு
எடுத்துச் சொல்வது என்கடமை ஆச்சு
மத்திகிரி, 4-9-16, காலை 10.45