1011 நிறைவில்லை
எதற்காகப் படைத்தாய்
என்பதைக் கூறு
எதைஎதிர் பார்க்கிறாய்
என்பதைச் சொல்லு
வீணாக ஒன்றையும்
படைக்காத போது
என்னை படைத்ததின்
காரணம் கூறு
எதற்காக நானும்
இதையே கேட்கிறேன்
எவ்வித பதிலை
எதிர்பார்க்கின்றேன்
என்பதும் உனக்குத்
தெரிந்த பினாலே
ஏற்ற பதில்தான்
எனக்குமே வேண்டும்
தேவை இல்லாத
கேள்விகள் கேட்டு
தெரிந்த பதிலை
ஏற்கவும் மறுத்து
வீணாக உன்னை
வம்புக்கு இழுத்து
வேண்டாத காரியம்
விரும்பியா செய்கிறேன்
ஒவ்வொரு நாளின்
வாழ்வினை நினைக்க
ஒதுக்கிடும் சிலநொடி
நேரத்தில் கூட
திருக்குள்ள மனது
எனக்குள்ளே இருந்து
தேடிடும் ஒன்றை
உன்னிடம் கேட்டேன்
ஒருவித நிறைவு
மனதுக்குள் இருந்தும்
மறுபக்கம் ஏதோ
குறையொன்று இருக்குது
எதுவென அதையே
எண்ணிடும் போது
அதுமட்டும் இன்னும்
புரிந்திட மறுக்குது
நீதந்த வாழ்வில்
குறையொன்றும் இல்லை
ஆயினும் அதனுள்ளே
நிறைவுமே இல்லை
அந்த நிறைவை
நீதரும் வரையில்
அறிந்திட எனக்கு
வழியுமே இல்லை
மத்திகிரி, 17-11-2018, இரவு, 10.30