517 Not maya
Is it a dream or true or imagination
And all that we see are mere illusion?
Do the body along with senses
Which experience everything is false?
Is there any meaning in living
If life is considered as ‘maya’ (illusion)
This a philosophy of the defeated one
And a philosophy which was defeated by the successful one
Will we remain crippled
By saying everything as maya
Come on and stand up
And march forward with much courage
The world which we see is not mere dream
And nothing in it is maya
And the life that we live is not mere waste
And life is not without any meaning
We are not created vainly
And never sent with empty hands
He bestowed friends and relatives
Along with this earth as a gift
He asked us to be fruitful and multiply
And asked us to rule over the entire earth
And asked us to live by sharing
And told us to accept responsibility for that
And those who understood this, progressed in life
And lived a magnificent life
And taking others along with them
Helped them to understand the greatness of creation
Let us also join with them
And help everyone to live
And live happily knowing that
This is the will of God
Mathigiri, 15-9-16, 2.55
As I am reading again about the Indian worldview of ‘maya’ and illusionary nature of the world, I compared it with Muktivedic view, which accepts the reality of the world in all its form. Amidst all the suffering and pain, it encourages us to celebrate the material blessing that God has given us and rejoice in Him. Though we have ‘bliss’ as the climax of our spirituality/mukti in Hinduism too, for common people it presents a bleak picture about world and life. Even the mukti which it promotes is more a means to escape from the karma-samsara and all kinds of dhukkas [sufferings] . A gloomy, pessimistic view of world, life and mukti is an invisible inner current in our Indian worldview. Though sin is projected as its counterpart in Muktiveda, yet the overall picture that we get is celebration of life, bhakti and mukti. Rejoice always in the Lord; again I say rejoice—said the bhakta amidst all his suffering.
517 மாயையல்ல
கனவோ, நினைவோ, கற்பனையோ
காண்கின்ற யாவும் சொப்பனமோ
உடலும் மனதும் உயிருடனே
உணர்ந்திடும் யாவும் பொய்தானோ
வாழ்வும் மாயை என்றாலே
வாழ்வதில் அர்த்தம் ஏதுமுண்டோ
வீழ்ந்தவர் கூறிய வாதமிது
வென்றவர் வீழ்த்திய கொள்கையிது
மாயை மாயை என்று சொல்லி
வீணில் முடங்கிக் கிடப்போமோ
துணிவு கொண்டு புறப்படுவீர்
தோள்தட்டி எழுந்து வென்றிடுவீர்
காணும் உலகம் கனவல்ல, அதில்
காணும் ஏதும் மாயையல்ல
வாழும் வாழ்க்கையும் வீணுமல்ல
அர்த்த மற்றது வாழ்க்கையல்ல
வீணாய் நம்மையும் படைக்கவில்லை
வெறுமையாய் நம்மை அனுப்பவில்லை
உற்றம் சுற்றம் உறவுடனே
உலகையே தந்தான் வெகுமதியாய்
பல்கிப் பெருகிப் பரவச்சொன்னான்
பாரை முழுமையாய் ஆளச்சொன்னான்
பகிர்ந்து அளித்து வாழச்சொன்னான்
பொறுப்பை அதற்கும் ஏற்கச்சொன்னான்
இதனை உணர்ந்தோர் ஏற்றம்கண்டார்
ஏறுநடைபோட்டு வாழ்ந்து சென்றார்
பிறரைத் தம்முடன் இணைத்துகொண்டு
படைப்பின் உயர்வைப் புரியச்செய்தார்
அவருடன் நாமும் இணைந்திடுவோம்
அனைவரும் வாழ உதவிடுவோம்
இறைவன் சித்தம் இதுவென்று
ஏற்று இனிதாய் வாழ்ந்திடுவோம்
மத்திகிரி, 15-9-16, மதியம், 2.55