Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 518

$
0
0

518 Took saranagati (refuge)

Seeking peace of mind I came unto your presence
Who else is there as the abode for lowly ones
You alone become the treasure for the poor one
And you bestowed that noble status even to me

I live because of you and praise you with whole heart
And I am get wet each day in the rain of your grace
And I bow at your holy feet by offering myself for you
And I rejoice as I do your seva

How much joy is there in praising you
And my heart melts as I sing your praise
When I think about your act my eyes are filled with tears
And living with you always is the merit (punya) that I attained

You gave the boon to live alone
And you gave me the right to live within you
How many concessions that you gave for me
Somehow you have a special concern for me

Why you have this much mercy upon me
And when I think about it I really wonder
There is some reason for this
And I am longing to know about it

Would it be the first love you had for me
Or is it your mercy as I lived without knowing you
Is it your right that I belong to you even before I was formed (in the womb)
Or is it your duty once I become yours

Whatever it might be, you become my own
Therefore you give everything in full measure
How you will say ‘no’ once I ask whatever I want
Therefore you showed your grace with much responsibility

Therefore I came unto your holy presence
And received that noble status in you
Becoming a bhakta is your best gift
And I took refuge at your feet

Mathigiri, 16-9-16, 11.20 pm.

The way and reason for God to redeem me and make me His own still remains a mystery to me. May be as He does not want to lose what belongs to him, he showed this extra grace in my life to make me His own. So there is a reason for me to go to His presence to celebrate this mystery with Him always.

518 அடைந்தேன் சரணாகதி

நிம்மதி தேடி வந்தேன் உன்சன்னிதி
நீசர்க்கு நீயன்றி வேறிங்கு யார்கதி
ஏழைக்கு என்றுமே நீயாவாய் பெரும்நிதி
எனக்குமே அருளினாய் உன்னிலே உயர்கதி

உன்னாலே வாழ்கிறேன் உளமாறத் துதிக்கிறேன்
உன்னருள் மழையிலே நாள்தோறும் நனைகிறேன்
உனக்கென எனைத்தந்து உன்னடி பணிகிறேன்
உன்சேவை செய்வதால் உவகையும் அடைகிறேன்

போற்றி துதிப்பதில் எத்தனைப் பேரின்பம்
உன்புகழ் பாட உருகுது என்மனம்
உன்செயல் நினைத்தாலே குளமாகும் கண்களும்
உன்னுடன் வாழ்வது நான்பெற்ற புண்ணியம்

தனித்து வாழ்ந்திட வரமும் நீதந்தாய்
உனக்குள்ளே வாழ்ந்திடும் உரிமையும் உடன்தந்தாய்
எத்தனை சலுகைகள் எனக்கென நீதந்தாய்
என்னவோ என்மீது கரிசனம் நீகொண்டாய்

என்மீது உனக்கும் ஏனிந்தப் பரிவு
என்பதை எண்ணிட வியக்குது அறிவு
ஏதோ காரணம் இதற்கும் உள்ளது
அதையும் அறியத் தவிக்குது மனது

ஆதியில் நீகொண்ட அன்பாக இருக்குமோ
அறியாது வாழ்ந்தேன் என்பதால் இரக்கமோ
உருவாகும் முன்னமே உனதென்ற உரிமையோ
உனதென்று ஆனபின் நீகொண்ட கடமையோ

எதுவானபோதும் எனக்கானாய் உறவாய்
அதனாலே தருகின்றாய் எல்லாமே நிறைவாய்
எத்தனை வேண்டினும் எப்படி மறுப்பாய்
எனவே அருளினாய் நீயும் பொறுப்பாய்

அதனால் வந்தேன் உந்தன் சன்னிதி
அடைந்தேன் உன்னிலே அந்த உயர்கதி
பக்தன் என்பது நீதந்த வெகுமதி
பாதத்தில் அடைந்தேன் நான் சரணாகதி

மத்திகிரி, 16-9-16, இரவு 11.20


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles