523 need humility
In this morning when rooster makes noise
and when I bow at your feet
transcending heart and language
I came unto your feet all alone
Joining heart with senses
thinking only you in my heart
and singing your glory
I worship you humbly
You truly showed
humility and love to the world
I too came to ask you
to put them on me
Truly there is nobleness
to be as your bhakta
but I need to be qualified for this
and you alone should bestow it to me
In order to understand
the greatness of your Veda
kindly open my inner eyes
and give mind (buddhi) for that too
I need humbleness as per the knowledge
and along with it I need simplicity
and I should do only your seva
and should live only for you
For this I need your grace
and I need bhakti to receive it
and to receive bhakti I need humility
and I should receive it only from you
Mathigiri, 18-9-16, 6.00 am.
As I got up very early, after having a cup of tea, I had a relatively calm atmosphere which is a rare event here at Mathigiri as I am often disturbed by too much sounds and noises. But this morning it was relatively calm and I heard the voice of a rooster nearby. Then inspired by that calm atmosphere I wrote this song worshiping the Lord.
523 பணிவுவேண்டும்
சேவல் கூவிடும் காலையிலே-உன்
சேவடி பணியும் வேளையிலே
மனம், மொழி கடந்த நிலையினிலே
திருவடி வந்தேன் தனிமையிலே
உளமுடன் உணர்வையும் சேர்த்துக்கொண்டு
உன்னையே மனதில் எண்ணிக்கொண்டு
உன்திருப் புகழினைப் பாடிக்கொண்டு
உன்னைத் தொழுதேன் பணிவுகொண்டு
அன்பு, பணிவு எளிமையையே
அவனிக்குக் காட்டினாய் உண்மையிலே
அவற்றையே நானும் அணிந்துகொள்ள
வந்தேன் உன்னிடம் வேண்டிக்கொள்ள
உனது அடியான் என்பதிலே
உயர்வு உண்டு உண்மையிலே
ஆயினும் அதற்கும் தகுதிவேண்டும்
அதையும் நீயே தரவேண்டும்
உனது வேதத்தின் உயர்வினையே
உணர்ந்து கொள்ள உண்மையிலே
அகக்கண் திறந்து அருளிடுவாய்
அதற்கும் அறிவைத் தந்திடுவாய்
அறிவுக்கு ஏற்ற பணிவுவேண்டும்
அத்துடன் அடக்கமும் சேரவேண்டும்
உனக்கே அடிமை செய்யவேண்டும்
உனக்காய் நானும் வாழவேண்டும்
இதற்கும் உனது கருணைவேண்டும்
அதனை அடையப் பக்திவேண்டும்
பக்தியைப் பெறவும் பணிவுவேண்டும்
பணிந்து உன்னிடம் பெறவேண்டும்
மத்திகிரி, 18-9-16, காலை, 6.00