524 Charity
God gives the spirit of mercy
and it is a gift from God alone
and to help the needy one
is a boon given by God to us?
living without having mercy
is impossible for anyone who has a heart
and as we receive it from God
it only adds more value in our life
when we think that
Because of mercy alone He redeemed us
living without mercy
is indeed a crime for us?
Helping the poor with mercy
is not charity, let us understand this
only they alone actually
helping us to do that, let us realize this
when we think that
we are indebted to so many people
all that we do for others
never will repay that debt
once we remember this
we will never have the spirit that we are helping others
to live as a human till the end
nothing will help us like the spirit of mercy
Mathirigiri, 19-9-16, 2.40 pm
I strongly believe in charity. Of course I too agree that, ‘throwing a bone to the dog is not charity but sharing in the same bone when we are as hungry as the dog’, but instead of proclaiming such ideology, even if we could throw some bone to a dog in its need is more essential than having a philosophical talk about it.
524 மனித நேயம்
இரங்கிடும் மனதையும் இறைவனே தருகிறான்
இரக்கம் என்பது அவனது கொடையாம்
எளியோற்கு இரங்கி உதவுதல் என்பது
இறைவனே நமக்கும் தந்த வரமாம்
இரக்கம் இன்றி வாழ்தல் என்பது
இதயம் உள்ளோர்க்கு இயலா ஒன்றாம்
இரக்கம் பெற்ற நமக்கும் அதுவும்
இயல்பாய் அமைவது இன்னும் சிறப்பாம்
இரக்கத்தினாலே நம்மையும் மீட்டான்
என்பதை எண்ணிப் பார்த்திடும் போது
இரக்கம் இன்றி வாழ்தல் என்பது
எண்ணிட முடியாப் பாதகச் செயலாம்
எளியோர்க் கிரங்கி உதவுதல் என்பது
ஈகை அல்ல என்பதை உணர்வோம்
உதவிட நமக்கும் உதவிடும் அவரே
நன்மை நமக்குச் செய்கிறார் என்போம்
எத்தனை பேர்க்குக் கடனும் பட்டோம்
என்பதை எண்ணிப் பார்க்கும் போது
இரங்கிச் செய்யும் எவ்விதச் செயலும்
பட்ட கடனையும் தீர்த்துவிடாது
இதனை எண்ணிப் பார்த்து விட்டாலே
இரங்குரோம் என்ற எண்ணம் வராது
இறுதி வரையில் “மனிதனாய்” வாழ
இரக்கம் போல வேறொன்றும் உதவாது
மத்திகிரி, 19-9-16, மதியம் 2.40