Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 539

$
0
0

539 will find peace

This is the time to come unto you
and this is the time to talk with you
and sharing all the streams of my thought
this is the time to have fellowship with you

do I need to set aside time for you
and should I seek your permission to come unto you
do I need to remind about my right with you
or do you want someone to go between us

where is the restriction for me in my own home
and where is the limitation for me with you
is there any interference between us
and there is no contradiction between us

I won’t utter unnecessary words
and won’t do unnecessary arguments
and I won’t become tired by talking too much
and I won’t waste the time unnecessarily

when you come and join with me
I will share with you silently
when I come and pray to you
I won’t have other things in my mind

I won’t even count the time
and I won’t stop till I become tired of myself
whenever I think I will come unto you
and I will find peace only in this

Mathigiri, 2-10-16, 11.05 pm.

The beauty of bhakti is that it helps a bhakta to feel at home with the Lord. We need not absorb any formality. As we have our inherited freedom in our home, we can have access with the Lord that too in our own terms. I celebrate that kind of bhakti in the Lord each day of my life.

539 அமைதி காண்பேன்

உன்னிடம் வருகின்ற நேரமிது
உன்னுடன் பேசிடும் காலமிது
என்மனஓட்டத்தை உன்னிடம்சொல்லி
உன்னுடன் உரையாடும் பேறுமிது

உனக்கென நேரமும் ஒதுக்கணுமா
வரவேண்டி அனுமதி கேட்கணுமா
உரிமையைச் சொல்லியும் காட்டணுமா
எவரேனும் எனக்காய்ப் பேசணுமா

என்வீட்டில் எனக்கென்ன கட்டுப்பாடு
என்மீது உனக்கென்ன மட்டுப்பாடு
நம்மிடை உண்டோ குறுக்கீடு
இல்லையே நம்மிடம் முரண்பாடு

வீணான வார்த்தைகள் கூறமாட்டேன்
வேண்டாத வாதங்கள் செய்யமாட்டேன்
வாயாலே பேசியும் ஒயமாட்டேன்
வீணாக நேரத்தைப் போக்கமாட்டேன்

என்னோடு நீவந்து இணைந்துகொள்ள
மெளனமாய் உன்னிடம் சொல்லிடுவேன்
உன்னிடம் வேண்டிடும் போதினிலே
வேறொன்றில் சிந்தையை வைக்கமாட்டேன்

நேரத்தை கணக்கிட்டுப் பார்க்கமாட்டேன்
நானாக ஓயும்வரை நிறுத்தமாட்டேன்
எப்போ நினத்தாலும் வந்திடுவேன்
இதில்மட்டும் அமைதியைக் கண்டிடுவேன்

மத்திகிரி, 2-10-16, இரவு 11.05


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles