1014 ஏன் பாடாது
உணர்வாலே உனைத்தேடி
உன்னோடு கலந்து
உள்ளாக உனைத் தேடி
உறவாக இணைந்து
அறிவுக்கு அப்பாலே
ஆன்மாவில் நினைந்து
அனுதினம் தொழவேண்டும்
நானுனைப் பணிந்து
இதயத்தில் நீவந்து
குடியுமே கொள்ள
எண்ணத்தில் நீநின்று
நிறைந்துமே கொள்ள
எப்போதும் உன்னோடு
உறவாடும் பேற்றை
ஒருநாளும் இழக்காது
நான்பெற வேண்டும்
உலகத்தில் வாழ்ந்தாலும்
உன்னோடு வாழ்ந்து
உன்னருள் தன்னையும்
அதனிடை நினைந்து
நாள்தோறும் நீசெய்யும்
நன்மைகள் எண்ணி
நானுன்னைப் பண்பாடி
கொண்டாட வேண்டும்
உன்வேதம் மூலமே
உன்சித்தம் தேடி
உன்னாவி அருளோடு
அதைசெய்ய நாடி
உன்பக்தர் துணையோடு
நிறைவேற்றிக் காட்டி
உன்புகழ் தன்னையே
உயர்த்திட வேண்டும்
இதுபோல அனுதினம்
நான்வாழும் போது
இதனினும் பேரின்பம்
இவ்வுலகில் ஏது
அதைநீ தந்திட
ஆனந்தம் கொண்டு
ஐயனே என்மனம்
ஏனுன்னைப் பாடாது?
மத்திகிரி, 20-11-2018, இரவு, 10.30