551 Another boon
You should give another boon
And it is not enough what I have already
I should have compassion like you
And should remove selfishness within me
How much selfishness is behind whatever I do?
What can I do about it?
I pretend that I am serving others
But stop when some hurdle comes
I give thousands of reasons for that
And how much I argue for others to accept it
Though my own heart witness against it
I easily despise it
When your righteousness troubles me
How many reasons I give for that
And then when you keep quiet
Unable to bear it further I fall at your feet
Why you kept this struggle within me
You stripped me naked to show who I am
Not accusing me how much you have punished me
I cannot bear it any more, please forgive me
You give another boon to get rid of this selfishness
And bestow the grace to remove it
Adding more to all the boons which you already gave
Give this one additionally
Mathigiri, 13-10-16, 2.10 pm.
Personal ego hurts one than hurting others. Particularly when I began to justify my acts in the name of serving others or not serving others, I search so many reasons for it. But after debating over them in my mind, when I become tired and keep quiet, then silently the righteousness of God, judges me without saying or rebuking me. This egoism add with selfishness is a constant struggle with which I fight every day.
551 இன்னொருவரம்
இன்னொரு வரமொன்று நீதரவேண்டும்
இருப்பது போதாது இரங்கிட வேண்டும்
உன்போல் இரக்கம் நான்கொள்ள வேண்டும்
என்னுள் சுயநலம் நீங்கிட வேண்டும்
எதைநான் செய்தாலும் அதன்பின் சுயநலம்
எத்தனை இருக்குது இதையென்ன செய்வேன்
பிறருக்கு உழைப்பதாய் வேடமே போடுறேன்
இடையூறு இடைவர உடனே நிறுத்துறேன்
அதற்கும் ஆயிரம் காரணம் சொல்கிறேன்
அதைக்கூடப்பிறறேற்க எத்தனை பேசுறேன்
இடையில் மனசாட்சி எடுத்தே சொன்னாலும்
அதைக்கூட அலட்சியம் எளிதாகச் செய்கிறேன்
உன்நீதி என்நெஞ்சை உறுத்திடும் போது
எத்தனை நியாயங்கள் எடுத்து உரைக்கிறேன்
அதன்பின் நீயும் அமைதி காக்க
அதைத் தாங்க இயலாது உன்னடிவிழுகிறேன்
ஏனிந்தப் போராட்டம் என்னுள் நீவைத்தாய்
என்தோலை உரித்து எனக்குக் காட்டினாய்
ஏதுமே கூறாது எப்படித் தண்டித்தாய்
இதைத்தாங்க முடியாது மீண்டும் மன்னிப்பாய்
சுயநலம் போக்கிட வரெமொன்று அளிப்பாய்
சுயத்தை நீக்கிடும் கிருபையும் அளிப்பாய்
இதுவரை தந்த வரத்துக்கு மேலாக
இதைஒன்று சேர்த்து நீயுமே அருள்வாய்
மத்திகிரி 13-10-16, மதியம் 2.10