552 Gave new life
You received me with love
And more than that you gave new life to me
And allowed me to live happily in you
And you gave boon to sing about it
I suffered due to many things
And I was drowned in the ocean of sorrow
By uplifting me you took me to the shore
And removing all the sorrows you gave joy
I was eager to know more about you
And I wanted to know about your nobleness
In order to show the simple means
You become a guru accepting my own (human) nature
As thousands of questions rose to toss me
Like the roaring waves
Silencing them
You arranged the means to know about you
Removing the pride that I knew you
You gave the nature of humility
And you helped me to understand your true nature
By hiding to the wise and giving to this unlettered one
Mathigiri, 17-10-16, 11.15 pm.
Another song thanking God what He has done to me in the Lord.
552 வாழ்வளித்தாய்
அன்புடன் என்னை அரவணைத்தாய்
அத்துடன் எனக்கு வாழ்வளித்தாய்
இன்புற உனக்குள் வாழவைத்தாய்
இதைச் சொல்லிப்பாட வரமளித்தாய்
துன்பங்கள் பலவுற்று உழன்றுவந்தேன்
துயரக் கடலிலே மூழ்கிநின்றேன்
தூக்கி எடுத்துக் கரைசேர்த்தாய்
துன்பங்கள் போக்கி மகிழ்வளித்தாய்
உனைமேலும் அறிய உவகைகொண்டேன்
உன்மேன்மை அறிய எண்ணம்கொண்டேன்
எளிய வழிகாட்ட இரக்கம் கொண்டு
என்சாயல் ஏற்றுக் குருவாய் வந்தாய்
ஆயிரம் கேள்விகள் அலையலையாய்
அலையென மோதி ஆர்ப்பரிக்க
அவற்றின் ஓசையை அமர்த்தி நீயும்
உன்னை அறியும் வழிவகுத்தாய்
அறிந்தேன் என்ற அகந்தை நீக்கி
அடக்கம் என்ற பண்பளித்தாய்
ஞானிக்கு மறைத்துப் பேதைக்கு அளிக்கும்
உன்குணம் தன்னைப் புரியவைத்தாய்
மத்திகிரி, 17-10-16, இரவு 11.15