570 What a punya (merit) I have done
I come again seeking boon
from you Oh charitable one
There is no other refuge other than your feet
there is no lack of grace in you
I will sing and praise you
and I will hail you the holy one
I will tell that this is right time
and beg you to give refuge
I came all alone unto you
I get hold of your feet
when I sit at your feet
I received that comfort
the closeness that we have
in our relationship
who else can understand?
who is more blessed one other than me?
Choosing me for your sake
showing the unfathomable compassion on me
having a right over me
you rejoice having relationship with me
What kind of merit I have done
to get this blessed status
when You called me for you
I gave myself without refusing
Therefore you overlord me
you gave this status as your slave
upholding it on my head
I come to serve you as a slave
Mathigiri, 10-11-16, 1.50 pm
Another song enjoying and celebrating the special privilege and status that I received as the slave of God. I often feel that God too is rejoicing to have such intimate fellowship with me as He has unfathomable compassion on me.
570 என்ன புண்ணியம் செய்தேன்
வந்தேன் வள்ளலே வரம் வேண்டி
வந்தேன் மீண்டும் கரம் ஏந்தி
உன்னடி அன்றித் தஞ்சமில்லை
அருளுக்கு உன்னிடம் பஞ்சமில்லை
துதித்து உன்னைப் பாடிடுவேன்
தூயவன் உன்னையே போற்றிடுவேன்
தருணம் இதுவெனக் கூறிடுவேன்
தஞ்சம் அருளிடக் கெஞ்சிடுவேன்
தனித்து உன்னிடம் வந்துவிட்டேன்
தாளினை நானும் பற்றிவிட்டேன்
அதனடி அமர்ந்து இருக்கையிலே
ஆறுதல் நானும் அடைந்துவிட்டேன்
உனக்கும் எனக்கும் இடையினிலே
உள்ள இந்த உறவினிலே
இருக்கும் நெருக்கம் எவரறிவார்
என்போல் புண்ணியம் யார்பெறுவார்
உனக்கென என்னைத் தெரிந்துகொண்டு
உலகம் புரியாக் கருணைகொண்டு
உரிமை என்மேல் நீயும் கொண்டு
உறவாடி அனுதினம் களிக்கின்றாய்
இந்தப் பேறு நான் பெறவே
என்ன புண்ணியம் செய்துவிட்டேன்
என்னை நீயே அழைத்தபோது
எவ்வித மறுப்பின்றித் தந்துவிட்டேன்
அதனால் என்னை ஆட்கொண்டாய்
அடியவன் என்ற உயர்வு தந்தாய்
அந்தப் பேற்றினைச் சிரம் ஏந்தி
அடிமை செய்திட நான்வந்தேன்
மத்திகிரி, 10-11-16 மதியம் 1.50