575 What else I require
I am not going to ask
Anything more than this
I won’t ask any
Special privilege
Once I live with you
Becoming your own
What is there?
For me to ask for my need
I am rejoicing
In this relationship
My heart is filled
With the peace that you gave
As your grace upholds me
My body is melting
When I praise you whole with heart
Tears are filling in my eyes
Taking me to
Some kind of noble status
And arranging a condition
Where there is no need to utter anything
Arranging a
Separate path for me
You come along with me
Thinking about my bhakti
This bliss is
Enough for me
When you over lord me
I should submit
Without seeking any other thing
Coming unto your feet
Once after giving me to you
I should live in you
Mathigiri, 16-11-6, 1.55 pm
Another song celebrating the special privilege and special relationship that I enjoy each day with my Lord.
575 இனியென்ன வேண்டும்
எனக்கென இனிஒன்றை
உன்னிடம் வேண்டேன்
எனக்கெனத் தனியொரு
உரிமையும் கேட்கேன்
உனக்கென உன்னுடன்
உன்னுள்ளே வாழ்ந்தபின்
எனக்கென இனியென்ன
தனித்துமே கேட்பேன்
உன்னிந்த உறவிலே
உள்ளமே மகிழுதே
நீதரும் அமைதியால்
மனமுமே நிறையுதே
உன்னருள் தாங்கிட
ஊனுடல் உருகுதே
உளமாற போற்றக்
கண்களும் கசியுதே
ஒருவித உன்னத
நிலைக்கு அழைத்து
ஒன்றுமே பேசாத
நிலையையும் அமைத்து
எனக்கெனத் தனியொரு
பாதையைக் கொடுத்து
என்னுடன் வருகிறாய்
பக்தியை நினைத்து
இந்தப் பரவசம்
எனக்கினிப் போதும்
என்னை ஆட்கொள்ள
உடன்பட வேண்டும்
ஏதுமே வேண்டாமல்
உன்னடி வந்து
என்னையே தந்தபின்
உனில் வாழ்வேண்டும்
மத்திகிரி, 16-11-16, மதியம் 1.55