574 I won’t keep quiet
Who is the meanest one other than me?
Why I tell this to you
“You are the one who seek and save the sinner
Your are the protector for the weak”
Every one said this to praising you
There is none equal to you anywhere, they said
There is none like me who has fallen more wretchedly
Yet you have never redeemed me
You never look unto this crippled one
And there is nothing hidden from you
I am fallen in thought and word
But why this much delay to save me oh Charitable one
One time if I called you came running
You rushed to save (many)
I cried several times
But you don’t have mercy upon this sinner
Yet I am not let you go easily
And not going to remain quiet till I receive grace
Mathigiri, 15-11-16, 2.20 pm.
Another song based on Surdas:
“Purifier of the fallen,” pitier of the piteous,”
guardian of those who have no guard”:
such are the phrases they always use to praise you–
scriptures, universe, gods.
Yet no one has falled further than have I,
no one is more guardless, more piteous.
Why do you not give me deliverance?
Is anyone more crippled than I? (p.707)
…. … …. …
Nothing has ever been said or enacted
in word or in deed or in thought
that you didn’t see occur, says, Sur.
You know it all inside out.
—Sur’s Ocean, eds. Kenneth E Bryant, trs. By John Stratton Hawley, Massachusetts, Murty Classical Library of India, Harvard University Press, song 408, pp. 707 & 709
574 ஓயமாட்டேன்
என்னிலும் நீசன் எவனிருப்பான்
ஏனிதை உனக்கு நான் சொன்னேன்
“பாவியைத் தேடியே மீட்பவன்நீ
பெலனற்ற பேருக்குக் காவலும்நீ”
என்று எல்லோரும் உனைச்சொன்னார்
ஈரேழு உலகில் உன்போல் இலையென்றார்
என்னைப் போல் வீழ்ந்தவர் எவருமில்லை
ஆயினும் ஏனென்னை மீட்கவில்லை
முடவனைக் கண்ணோக்கிப் பார்க்கவில்லை
உனக்கு மறைவாக ஒன்றுமில்லை
வாயாலும், மனதாலும் வீழ்ந்தேன் நானே
வள்ளலே காப்பதில் தாமதம் ஏன்
ஒருமுறை கூப்பிட்டால் ஓடிவந்தாய்
ஓடியே வந்துதான் மீட்டுக்கொண்டாய்
பலமுறை கதறினேன் கேட்கவில்லை
பாவிக்கு உன்னிடம் இரக்கம் இல்லை
ஆயினும் உன்னைநான் விடவும் இல்லை
அருளினைப் பெறும்வரை ஓய்வதில்லை
மத்திகிரி, 15-11-16, மதியம் 2.20, Sur 408, p. 707-09