573 The Director is not correct
Enough is enough please leave me alone
I become tired of struggling a lot
Am I available for you to make me to dance?
And to test about your good and bad things
Many are (eagerly) waiting for that
Why you drag me unnecessarily
Once I sit in a corner after becoming crippled
Why you ask me again to stand with the help of a crutch
What is this–not even listening properly?
Even if I rebuke, you never let me go
Even if I beg you why you are doing this
And if I become upset, then you punish me
What more can I say about it
How I am going to make you understand
Are you doing it deliberately?
Or pretending that you don’t understand
I agreed to act only one time (scene)
And was willing to do that just for your sake
I came believing that it will be a small role
I requested to complete it at the early
You too agreed for that
Accordingly put me on the stage
Till others come and do their part
You made me to act alone
Then you never turned to my side
Never asked me to complete my act
I have never seen
Such a director anywhere else
I don’t know what even my role is
I don’t know when others will come and act
There is no means for me to come down on my own (from the stage)
There is no one to watch my performance
I am performing all alone
I am doing a monologue
I don’t know why I am even acting
I don’t know when I am going to complete it
Mathigiri, 11-11-16 (12-11-16), 12.15 am
Another big fight with the Lord venting out my anger with him. As usual the anger which I express in Tamil cannot be conveyed in other language.
573 இயக்குனர் சரியில்லை
போதும் போதும் என்னை விட்டுவிடு
போராடி இளைத்தேனே ஆளைவிடு
நான்தான் கிடைத்தேனா ஆட்டிப்பார்க்க
நன்மை-தீமையை உரசிப் பார்க்க
இதற்காகப் பலபேர்கள் காத்திருக்க
எதற்காக வம்புக்கு இழுக்கிறாய்நீ
முடமாகி மூலையில் உட்கார்ந்தபின்
கோல் ஊன்றி நிற்கச் சொல்வதுமேன்
அதுவென்ன சொன்னாலும் கேட்பதில்லை
அதட்டியே பார்த்தாலும் விடுவதில்லை
கெஞ்சினும் என்னை ஏன் வஞ்சிக்கிறாய்
கோபித்தால் வீணாகத் தண்டிக்கிறாய்
இதற்கும் மேலாக என்ன சொல்ல
எப்படிச் சொல்லிப் புரியவைக்க
வேண்டுமென்றே நீயும் செய்கின்றாயா
விளங்காதவன் போல நடிக்கின்றாயா
ஒருநேரம் நடிக்கத்தான் சம்மதித்தேன்
உனக்காகச் செய்திட விருப்பம் கொண்டேன்
சிறுவேடம் என்றுதான் நம்பிவந்தேன்
சீக்கிரம் முடித்திட வேண்டிக்கொண்டேன்
அதற்கும் நீயுமே சம்மதித்தாய்
அதன்படி மேடையில் ஏற்றிவிட்டாய்
பிறர்வந்து அவர்வேடம் போடும்வரை
என்னை மட்டுமே ஆடவைத்தாய்
அதன்பின்பு என்பக்கம் திரும்பவில்லை
ஆட்டத்தை முடிக்கவும் சொல்லவில்லை
இதுபோன்ற இயக்குநர் எவரையுமே
இதுவரை நானுமே கண்டதில்லை
என்வேடம் எதுவெனத் தெரியவில்லை
எப்போது பிறர்வருவார் புரியவில்லை
நானாக இரங்கவும் வழியும் இல்லை
நடிப்பதைக் காணவும் எவருமில்லை
தன்னந்தனியாக ஆடுகின்றேன்
தனக்குள்ளே வசனத்தைப் பேசுகிறேன்
எதற்காக ஆடுறேன் தெரியவில்லை
எப்போது முடிப்பானோ விளங்கவில்லை
மத்திகிரி, 11-11-16 (12-11-16) இரவு 12.15