579 the nectar
I will say that this is your grace
I came to sing about it
What you give for me specially
I came to receive it
For some reason
You have special affection for me
Once realizing this
I too have much love for you
Till the end
I cannot understand the reason for this
But I don’t have time
To even think about it
To write a new song each day
To sing and praise you
To share many things about others
To pray for them
I don’t have enough time for these
I don’t have rest even for a minute
More than this I have many other needs
Added to these I have many worries
But I know one thing for sure
I have told about it many times
As you are there to carry my burden
Why should I worry about all these?
I will tell that this is what is called your grace
This only I received everyday
Though you give more than that I need
I received it as the nectar
Mathigiri, 18-11-16, 11.10 pm.
As I began my regular walking in the hall, I said to the Lord, ‘what is the reason for you to show this kind of special favour only to me? Though I never ask, you give more than what I required. But this extra grace never become excess to me and though I cannot understand the reason for it, I am going to enjoy it like nectar. Then as inspiration flowed I wrote this song based on the very mediation.
579 தெவிட்டா அமுது
இதுதான் உனது கிருபை என்பேன்
இதையே சொல்லிப் பாடவந்தேன்
எனக்கு என்று தனித்து நீயும்
தருவதை நானும் பெற்றுக்கொண்டேன்
என்னவோ உனக்கு என்மீது
இப்படி ஒருவிதத் தனிப் பாசம்
இதனை நானும் புரிந்த பின்னே
கொண்டேன் உன்னிடம் பெரும்நேசம்
காரணம் இதற்கு என்ன வென்று
கடைசி வரையில் புரியாது
ஆயினும் அதைப்பற்றி யோசிக்க
நேரமோ எனக்கும் கிடையாது
தினம் ஒருபாடல் எழுதிடவும்
துதித்து உன்னைப் போற்றிடவும்
பிறரைப் பற்றிப் பலசொல்லி
அவருக்காக வேண்டிடவும்
நேரமும் பொழுதும் போதவில்லை
நிமிட நேரம் ஓய்வில்லை
இதற்குமேலே என்தேவை
அத்துடன் ஆயிரம் மனக்கவலை
ஆனால் ஒன்றை நானறிவேன்
அதையும் பலமுறை சொல்லிவிட்டேன்
சுமக்க நீயே இருக்கும் போது
கவலைகள் எனக்கும் இனியில்லை
இதைத்தான் உனது கிருபையென்பேன்
இதையே தினமும் நான் பெற்றேன்
தேவைக்கு மிஞ்சியே தந்தாலும்
தெவிட்டா அமுதை நான்பெற்றேன்
மத்திகிரி, 18-11-16, இரவு 11.10