584 Sing His praise
In the sweet early morning search God
With joyful heart sing about Him
Pray for the world to be redeemed
He redeemed you also, and thinks and celebrates it
Till yesterday He was with you
He will accompany you tomorrow also
He will come along with you this day also
Thinking about this you sing about Him
He knows all your needs
He will provide and take care of you
When you sought more than that
By bestowing that too He will rejoice in you
You received this blessing
Remembering this you walk humbly
The one, who created, sustains and will destroy
Become humble one for the bhaktas
When you understand this your heart will melt
Both your eyes will become waterfalls
All your bones and nerves will shrink
Even your tongue will refuse to speak
Silently praising Him in your heart
Folding your hands think about His greatness
Keeping your head at His feet
Praise Him with full of heart
Mathigiri, 2-12-16, 5.45
As I got up very early around 4.00 am and unable to sleep I got up and made my tea and spent most of my time quietly not even praying but thinking about the Lord and so many things about him. As Vijay brought the milk and made his coffee and I asked him to sit with me and I sung this song very slowly in Bhubala raga and we worshiped the Lord together just by singing this song.
584 அவனை வாழ்த்து
இனிய காலையில் இறைவனைத் தேடு
இதயம் நிறைய மகிழ்ந்து பாடு
உலகோர் உய்ய உருகி வேண்டு
உன்னையும் மீட்டான் நினைந்து கொண்டாடு
நேற்று வரையில் கூட இருந்தான்
நாளை பொழுதும் துணையாய் இருப்பான்
இன்றும் கூட இணைந்து நடப்பான்
இதனை எண்ணி அவனைப் பாடு
உனது தேவை அவனே அறிவான்
உனக்குத் தந்து உவந்து புரப்பான்
அதற்கு மேலும் நீயும் நாட
அதையும் தந்து உன்னில் மகிழ்வான்
இந்தப் பேறு நீயும் பெற்றாய்
இதனை எண்ணிப் பணிந்து நடப்பாய்
படைத்துக் காத்து அழிக்கும் அவனே
பக்தனுக்காக எளியவன் ஆனான்
இதனை உணர இதயம் இளகும்
இருவிழியும் அருவி ஆகும்
நாடி நரம்பு ஒடுங்கி அடங்கும்
நாவும் கூடப் பேச மறுக்கும்
மெளனமாக மனதில் துதித்து
மேன்மை எண்ணிக் கரத்தைக் குவித்துச்
சிரசை அவனின் தாளில் வைத்துச்
சிந்தை நிறைய அவனை வாழ்த்து
மத்திகிரி, 2-12-16, காலை, 5.45