Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 619

$
0
0

619 as you lead

As you lead me
holding my hands
As I too
walk along with you

Though I don’t know about
The place where I shall go
as you are there
what shall I lack?

I don’t know
about the future clearly
Even the present is
Not so clear

There is no time
to think about the past
I know only that
I am walking with you

Thinking that I will hesitate
if you show clearly
you show only the path
in which I need to walk each day

Even as I fail to walk
Correctly in it
you take me along with you
with much compassion

Really as I received
this blessing
Everyday life too
goes smoothly

As tomorrow’s burden
is yours
my anxiety about it
disappears in you

I walk along with you
as you walk with me (each day)
I too experience
about it each day

Though I never have done
any merit to receive this
Somehow you bestow
more and more grace

Meragaon, 7-3-2017, 9.45 pm.

Though I planned my north visit and going accordingly, yet some unexpected changes makes me feel that he alone leads me according to his will. For example my plan was to see the aunts here in Meragaon and then go to Ranikhet. But now only Richard aunt alone lives as rest of them passed away, as I want to give some company to her as well as prepare some south Indian food, I stayed two days here. As they have a big bungalow with several rooms with beautiful hill views I also enjoyed my stay here taking complete rest. Above all when I gave the butterfly cross stitch she was so happy. As I thought about all these I wrote this song.

619 நீ நடத்த

இவ்விதம் கரம்பற்றி
என்னை நீ நடத்த
உன்னுடன் இணைந்து
நானுமே நடக்க

போகின்ற இடம்கூடத்
தெரியாத போதும்
துணை நீ இருக்கையில்
வேறென்ன வேண்டும்?

எதிர்காலம் எதுவெனத்
தெளிவாகத் தெரியாது
நிகழ்காலம் கூடச்
சரியாகப் புரியாது

சென்றதை நினைக்கவோ
நேரமும் கிடையாது
உன்னுடன் நடப்பது
மட்டுமே புரியுது

தெளிவாகக் காட்டினால்
தயங்குவேன் என்பதால்
அனுதினம் நடந்திடும்
வழிமட்டும் காட்டுறாய்

அதில்கூடச் சரியாக
நடக்காத போதும்
அணைத்துமே என்னையும்
அழைத்துமே செல்கிறாய்

உண்மையில் இந்தப்
பேற்றினைப் பெற்றதால்
அனுதின வாழ்வுமே
நிறைவுடன் நகருது

நாளைய பாரமும்
உனதே ஆனதால்
அதைப்பற்றிச் சிந்தனை
உன்னிலே மறையுது

நடத்துற உன்னுடன்
நடக்கிறேன் நாளும்
நாள்தோறும் இதனை
உணர்கிறேன் நானும்

இதைப்பெறப் புண்ணியம்
செய்யாத போதும்
ஏனோ அருள்கிறாய்
கிருபையை மேலும்

மேராகாவ், இரவு 9.45. 7-3-2017


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles