624 Whatever might be, please tell
Whatever it might be, please tell
And don’t have hesitation, listen me
I alone voluntarily ask you
Am I asking you to see good or bad in it?
No, no. you should not have this much anger
And there is no point in getting frustrated
Did I ever ask you whatever you do to me?
Am I ever contested whichever you do to me?
I remain like a person who does not want to talk
Even though I know to argue, I kept quiet
I was longing for your words
I cannot bear any more this silence from you
By mistake even I am saying this too
What else this poor one can do?
If I tell openly then it becomes a shame and if I keep within me I get depressed
Now what can I do in such situation?
This too become a routine for me
However I lament there won’t be any response from you
You are the Master who can say anything further
But I cannot let my right get lost
Even if you remain silent I know you
Even if you refuse to talk I know your mind
Once silence becomes your language
Nothing can stop to communicate your mind to me
Mathigiri, 2.15, p. 10-4-17, Job. 16:6
After reading Job chapter 16 (as per my regular reading from Purvaveda) the verse 6 (16:6) struck my mind deeply. Then based on it I wrote this song.
624 ஏதாய் இருந்தாலும் சொல்லு
ஏதாய் இருந்தாலும் சொல்லு
எவ்விதத் தயக்கமும் வேண்டாம் நீகேளு
நானாகத் தானே வந்துன்னைக் கேட்கிறேன்
நல்லதைக் கெட்டதைப் பார்க்கவா சொல்கிறேன்
ஆகா இத்தனை கோபமும் ஆகாது
அலட்டிக் கொள்வதில் லாபமும் கிடையாது
ஏதுநீ செய்தாலும் ஏனென்று கேட்டேனா
என்னநீ செய்தாலும் வம்பேதும் செய்தேனா
பேசாத மடந்தைபோல் பேசா திருந்தேனே
பேசத் தெரிந்தாலும் வாய்மூடிக் கொண்டேனே
நீகூறும் வார்த்தைக்கு ஏங்கியே நின்றேனே
நீகொண்ட மவுனத்தை நானினித் தாங்கேனே
எதோ தெரியாமல் இதையுமே சொன்னேனே
ஏழை நானினி வேறென்ன செய்வேனே
சொன்னாலும் வெட்கம் உள்வைத்தால் துக்கம்
இந்த எந்நிலைக்கு நானென்ன செய்வேனே
இதுவும் எனக்கு வாடிக்கை யானது
என்னதான் புலம்பினும் பதிலேதும் கிடையாது
ஆண்டான் உன்னிஷ்டம் யாரென்ன சொல்வது
ஆயினும் என்னுரிமையை விட்டிடமுடியாது
மவுனமாய் இருந்தாலும் நானுன்னை அறிவேன்
பேசநீ மறுத்தாலும் உன்னுள்ளத்தை உணர்ந்தேன்
மெளனமே உனது மொழியான பின்னாலே
உணர்ந்திட எனக்குத் தடையேதும் கிடையாது
மத்திகிரி, மதியம் 2.15, 10-4-17, யோபு 16:6