625 Heaven on earth
We came together for the joy of our heart
We worshipped your Holy feet together
O our Father, our God you too
Walk along with us without leaving us—we came….
As the world hails you and the heaven too sings your glory
O charitable one we too join to celebrate
To sing songs with much devotion
To dance overflowing with joy—we came…
Our heart melts as we seek your Holy feet
New songs are coming to sing your glory
As we rejoice filled in our spirit
Your grace too increases for our heart to be redeemed—we came…
We want to see the heaven on this earth
We want to live like this always
We saw the Kingdom of God in you
We realize the nobleness of bhakti in it—we came…
We attained the noble life of Mukti in it
We understand its glory on this earth
We experience it in everyday life
We rejoice as we live together in you—we came
Mathigiri, 10-4-17, 11.05
Another song reflecting about the joy of living together as bhaktas of the Lord to see the Kingdom of Heaven on this earth in and through the Lord.
625 இகத்திலே பரம்
சிந்தை மகிழ நாங்கள் வந்தோமே
சேவிக்க உந்தன் அடி பணிந்தோமே
எந்தையே இறைவா எம்முடன் நீயே
இணை பிரியாது நடந்திடுவாயே—சிந்தை
வையகம் போற்றிட வானகம் வாழ்த்திட
வள்ளலே நாங்களும் சேர்ந்து கொண்டாட
பக்தியுடன் நாங்கள் பண்ணிசைத்துப் பாட
பரவசம் மிகுந்தே கூத்துமே ஆட—சிந்தை
இதயமும் உருகுது இணையடி நாட
இன்னிசை பிறக்குது உன்புகழ் பாட
ஆவியில் நிறைந்து ஆனந்தம் எய்திட
அருளுமே பெருகுது மனதுமே உய்ய—சிந்தை
இகத்திலே பரத்தைக் காணவே விழைந்தோம்
இதுபோல் என்றும் வாழவே நினைந்தோம்
பரத்தின் ஆட்சியை உன்னிலே கண்டோம்
பக்தியால் அதன் மேன்மையை உணர்ந்தோம்
முக்தியின் உன்னத வாழ்வையும் அடைந்தோம்
மேதினியில் அதன் மாட்சியை அறிந்தோம்
அன்றாட வாழ்வில் அதன் அனுபவம் கண்டோம்
அடியவர் சேர வாழ்ந்து மகிழ்ந்தோம்
மத்திகிரி, 10-4-17, இரவு, 1.05