Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 645

$
0
0

645 Don’t delay further

I come unto you
To say something
But unable to tell
I stand still
What can I say?
That is my condition
Once I have seen you
How can I further talk?

My inner shyness
Prevents on one side
But my emotions
Are pushing me on the other side
Though I run
Towards you
My legs are twisted
Due to shyness

This is not
A new relationship
This is not the first time
For me to come unto you
Yet my tongue
Refuses to raises to talk with you
You too don’t have pity on me
Even though you know about me

As you have redeemed me
I know you
As Your received me
I gained you
Can’t you do the same?
One more time
Cannot you talk with me?
Calling me near to you?

What is the need?
For you to hesitate like me?
And why you keep quiet
Not saying anything?
Many days are gone
Since I listened to your talk
This is no way correct
I am telling this to you

More than this
How can I share about my condition?
Who else can give a
Solution to this
Once you know that
How adamant I am
There is no use in
Further delaying, believe me.

Mathigiri, 3-5-2017, 10.30 pm.

Again when I went for my evening walk, even without thinking about anything, the first two lines came in my mind. Ignoring them, I continued my walk and returned back. But after completing my regular reading, suddenly those two lines again began to echo in my mind. Then I thought in which genre I should develop that song. As the inspiration came in the evening, which is a time of romantic mood, then I wrote this song as the voice of the lady love who again long to listen the voice of her beloved who refuse to speak even though she came running to meet him to listen him one more time.

645 தாமதம் செய்யாதே

ஏதோ சொல்லத்தான்
உன்னிடம் வருகிறேன்
ஏதுமே சொல்லாமல்
திகைத்துமே நிற்கிறேன்
நானென்ன செய்யட்டும்
என்நிலை அப்படி
நானுனைக் கண்டபின்
பேசுவ தெப்படி

உள்ளான வெட்கம்
ஒருபுறம் தடுக்க
உணர்வுகள் மறுபுறம்
என்னையும் நெருக்க
நானுன்னை நாடியே
ஓடியே வந்தாலும்
நாணத்தால் கால்கள்
பின்னியே தடுக்கும்

இதுஒன்றும் புதிதான
உறவுமே இல்லையே
உன்னிடம் வருவது
முதல்முறை இல்லையே
ஆயினும் பேசிட
நாவெழ வில்லையே
அறிந்த உனக்கும்
இரக்கம் இல்லையே

நீவந்து மீட்டதால்
நானுனை அறிந்தேன்
நீஎனை ஏற்றதால்
நானுனை அடைந்தேன்
அதையே மீண்டும்
செய்யக் கூடாதா
அருகினில் அழைத்துப்
பேசக் கூடாதா

என்போல் தயங்கிடத்
தேவையும் என்ன
ஏதுமே சொல்லாமல்
இருப்பதும் என்ன
நீபேச நான்கேட்டு
நாள்பல வாச்சு
இதுகூடச் சரியில்லை
நான் சொல்லியாச்சு

இதைவிட எப்படி
என்நிலை சொல்ல
இதற்கொரு தீர்ப்பு
வேறெவர் சொல்ல
என்பிடிவாதம் நீ
அறிந்த பின்பு
தாமதம் செய்வதில்
பயனில்லை நம்பு

மத்திகிரி, 3-5-2017, இரவு 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles