646 Burden will go
I am groaning for sometime
And share my shortcoming to you
There is no use in standing afar from you due to fear
There is none who can console me
If I keep within me then it will become a burden
If I share with others, then it will become a rumor
If I come and share with you
My burden will automatically go
How much patience you have
And how much you love me
If I cry or become upset, you listen to me
Through that you give me comfort
When I hesitate thinking that
What shall I share with you?
You will make me to share by initiating the conversation
Then when I began to share you will listen silently
I need not see time and your convenience
I need not get an appoint with you
Whenever I think I can come unto you
Can share my thoughts with you
You never get frustrated by my pestering
You never run and hide when I come to you
In fact you will wait eagerly expecting my arrival
And when I began to groan you will open your heart to listen
Therefore again I come unto to you
O my Lord, I want to share with you
As usual listen with much patience
And you carry my burden
Mathigiri, 4-5-2017, 11.10 pm.
What I say about the Lord is not mere poetic imagination or wishful thinking. This is a reality in a bhaktas life. She can pour down or vent out her anger with the Lord. For me prayer is not just to know the will of God. It is fellowship where I can share all my thoughts, struggle, views, opinions etc. with Him. As I often do it, I reflected that reality of prayer in this song.
646 பாரம் நீங்கும்
கொஞ்ச நேரம் வந்து குமுறுகிறேன்
என்குறைகளை உன்னிடம் சொல்லுகிறேன்
அஞ்சி அஞ்சி நின்று பயனுமில்லை
ஆறுதல் சொல்பவர் யாருமில்லை
உள்ளே வைத்தாலோ பாரமாகும்
வெளியிலே சொன்னாலோ வம்பாய்ப்போகும்
உன்னிடம் வந்து சொல்லிவிட்டால்
என்பாரம் தன்னாலே நீங்கிப்போகும்
எத்தனை பொறுமை உனக்கிருக்கு
என்மீது உனக்குமே அன்பிருக்கு
அழுதாலும் கொதித்தாலும் கேட்டுக்கொள்வாய்
அதன்முலம் ஆறுதல் நீதருவாய்
என்னத்தை உன்னிடம் சொல்லுவது
என்றுநான் தயங்கியே நிற்கும்போது
பேச்சுக்கொடுத்து நீ கிளறிடுவாய்
பின்பேசும்போது பொறுமையாய்க் கேட்டிடுவாய்
நேரம்-காலம் நான் பார்க்கவேண்டாம்
உன்நேரத்தில் சற்றேனும் கேட்கவேண்டாம்
எப்போ நினைத்தாலும் வந்திடலாம்
என்எண்ணதை உன்னிடம் சொல்லிடலாம்
ஒருபோதும் நீ சலித்துக் கொள்வதில்லை
நான் வரும்போது ஓடியே மறைவதில்லை
எனக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
நான் குமுறினால் கேட்டிட மனம்திறப்பாய்
அதனாலே மீண்டுமே இப்போ வந்தேன்
ஐயனே உன்னிடம் சொல்ல வந்தேன்
வழக்கம் போல் பொறுமையாய்க் கேட்டுக்கொள்ளு
என்பாரத்தை நீயுமே ஏற்றுக்கொள்ளு
மத்திகிரி, 4-5-2017, இரவு 11.10