661 No secret
What is the need to tell this?
Where is any secret between us?
Once I belong to you
Where do I have a separate mind of my own?
Is this a relationship which could be explained by me?
How can I explains this by using any kinds of words
Though many relationships are in this world
Will our relationship be one among them?
I never had any physical relationship with you
I never touched your physical body also
But there is no relationship among humans without having a physical body
But I never had that kind of relationship with you
Do we need that kind of relationship?
When we have fellowship within our heart
There is no secret in it
We cannot understand it expect enjoying it
When bliss over flows in bhakti
When I have fellowship with you through my bhakti
As you bestow a marvelous grace which stands beyond reason
I understood the secret of bhakti
There is no need for me to say this
There is none who understood this relationship
Yet there is no secret in it
Nothing stops for other try to understand this
Bangaluru, 6-6-2017, 4.15
As I sat for my meditation and prayer, I reflected the relationship that a bhakta has with the Lord. Though we often use human terms to express our relationship with the Lord as He as our Father, Mother, Brother, Friend, Companion and even Lover, yet real mysticism defies all these terms and goes beyond it to enjoy a particular divine relationship which cannot be expressed by any human terms. All the mystics attempted and failed in it. At the same time mysticism is not a secret and esoteric experience but it is within the reach of every bhakta, provided if she is ready to go beyond the human terms to enjoy it.
661 இரகசியம் இல்லை
நானிதைச் சொலிட அவசியம் ஏது
நமக்குள்ளே வேறு இரகசியம் ஏது
உனதென ஆன்பின் எனக்கினி இங்கு
உள்ளமும் தனியாக வேறொன்றும் ஏது
இதுவென்ன புரிகின்ற உறவா கூற
எவ்வித மொழிகொண்டு எடுத்துச் சொல்ல
மானிட உறவுகள் ஆயிரம் இருந்தும்
நாம்கொண்ட உறவும் அவற்றுனுள் வருமோ
ஊனுடல் கொண்டு உறவாட வில்லை
உன்னுடல் தொட்டுமே பார்த்தது மில்லை
ஊனுடல் இன்றி மானுட உறவில்லை
உன்னுடல் தொட்டு உணர்ந்ததும் இல்லை
அதுபோன்ற உறவு தேவையா நமக்கு
அகத்துனுள் நாமிங்கு உறவாடும் போது
இரகசியம் இதிலே ஏதுமே இல்லை
இரசிப்பது அன்றி புரிவதும் இல்லை
பக்தியில் பரவசம் ஓங்கிடும் போது
பக்தியின் மூலம் உறவாடும் போது
புத்திக்கு எட்டாத பேரருள் நீதர
பக்தியின் இரகசியம் நானுமே அறிந்தேன்
நானிதைச் சொல்லிட அவசியம் இல்லை
நம்மிந்த உறவைப் புரிந்தவர் இல்லை
ஆயினும் இதில் எந்த இரகசியமும் இல்லை
அடுத்தவர் அறிந்திடத் தடையேதும் இல்லை
பெங்களுரு, 6-6-2017, காலை 4.15