662 Selfishness
Nothing is wrong with others
Still I didn’t understood about me properly
As long as I keep me ahead of others
I never have the ability to understand others
Each day I live with selfishness
I worship my own ego each day
Thinking that I am living for others
I appreciate myself a lot
Though I do something for others
Still selfishness will be forefront in it also
When something goes wrong in it
Then I will try to run away from fulfilling even that responsibility
When you point out this to me
The irritation with you will increase
But when I realize this
I will broke within me
Therefore you waiting patiently for me
In a proper way teaching me about it
Giving a penitent spirit
You again give me a spirit of repentance (Ps. 34:18)
Bangaluru, 6-6-2017, 4.45 am.
In every act, particularly when I claim that I am serving others, I see some hidden selfishness in it. Keeping me at the centre of my life I do many things. But when the Lord gently points this, I get more irritated with Him and began to argue. But He waits patiently for me to realize this and come back to him with a broken spirit and penitent heart to get healing and restoration.
662 சுயநலம்
எவ்வித குறையும் பிறர்மீது இல்லை
என்னையே நானின்னும் அறியவும் இல்லை
என்னையே முன்வைத்து பார்க்கின்ற வரையில்
பிறரை அறிந்திடத் திறனுமே இல்லை
சுயநலம் கொண்டு வாழ்கிறேன் நாளும்
சுயத்தையே போற்றித் துதிக்கிறேன் நானும்
பிறர்க்கென வாழ்வதாய் மனதினுள் எண்ணி
என்னையே மெச்சிக் கொள்கிறேன் நானும்
பிறர்க்காக ஏதேனும் செய்கின்ற போதும்
என்நலம் அதற்குள்ளே முன்வந்து நிற்கும்
அதிலே ஏதேனும் குறைவரும் போது
ஏதுமே செய்யாமல் ஒதுங்கிடத் தோன்றும்
இதைநீ எடுத்துக் காட்டிடும் போது
உன்மீது எரிச்சலும் அதிகமாய் ஓங்கும்
ஆயினும் நானிதை உணர்ந்திடும் போது
என்னுளம் எனக்குள்ளே உடைந்துமே போகும்
இதற்கென பொறுமையாய் நீ காத்திருந்து
ஏற்ற விதமாய் எடுத்துச் சொல்லி
நொறுங்குண்ட மனதை நீயே தந்து
நருங்குண்ட ஆவியை மீண்டும் அளிக்கிறாய் (சங்கீதம் 34:18)
பெங்களுரு, 6-6-2017, காலை, 4.45