802 Tradition of bhakti
As I came in bhakti tradition
I get drenched in the rain of bhakti
However my reason makes noise
I refuse to listen to it.
Without out bhakti there is no bhakta
There is no limitation for bhakti
Going beyond any theology
It will show the end of bhakti to theology
Bhakti never sees gotra (caste) and family
It never get trapped within any limitation
There is place for everyone in it
It will embrace whoever comes within it
If one bows calling herself as a simple one
Or brag herself as learned one
Both are the same before it
All the discrimination will flee before it
You kept me in this tradition
You gave the fire of bhakti within me
To sing and rejoice in you each day
You called me to be your bhakta
Removing all the discussion about theology and doctrines
Removing all kinds of unnecessary arguments
Running in the path which Mukti gave me
You enabled me to run making me as your own
Mathigiri, 18-1-18, 2.45
As I was reading about the philosophy and theology of Vedantic tradition as well as commentary about Uttaraveda (NT), I was overwhelmed by all the discussions and arguments about theology and doctrines. Particularly the sectarian doctrines and the discrimination they put on people who are include and who are excluded much irritated me. But thankfully bhakti, transcending all such kinds of limit welcomes all and gives space for everyone to express her bhakti and to live in it. As much irritated by the theology and philosophy, thanking God for me keeping in the wonderful tradition of bhakti I wrote this song worshipping him.
802 பக்தியின் மரபு
பக்தியின் மரபில் வந்ததினால்
பக்தியின் மழையில் நனைகின்றேன்
சித்தம் எத்தனை சத்தம் போட்டாலும்
அதன் சத்தத்தை கேட்க மறுக்கின்றேன்
பக்தி இல்லாமல் பக்தன் இல்லை
பக்திக்கு வரையரை ஏதுமில்லை
சித்தாந்த எல்லையை மீறியே ஒடி
சிந்தைக்குக் காட்டும் பக்தியின் எல்லை
கோத்திரம் குலமும் பார்ப்பதும் இல்லை
குறுகிய எல்லைக்குள் நிற்பதும் இல்லை
எல்லோர்க்கும் இடம் அதனிடம் உண்டு
எவர்வந்தாலும் அணைப்பதும் உண்டு
பாமரன் என்று பணிந்து நின்றாலும்
பண்டிதன் என்று பெருமை கொண்டாலும்
இருவரின் நிலையும் அதன்முன் ஒன்றே
ஏற்றத் தாழ்வும் ஓடிடும் நன்றே
இந்த மரபிலே என்னையும் வைத்தாய்
எனக்குள் பக்தியின் அனலைத் தந்தாய்
அனுதினம் உன்னையே பாடித் துதித்து
ஆனந்தம் கொள்ள பக்தனாய் அழைத்தாய்
வேதாந்த சித்தாந்த வாதங்கள் போக்கி
வேண்டாத தர்க்கங்கள் பலவற்றை நீக்கி
முக்தி வழிதந்த பாதையை நோக்கி
ஓடிட வைத்தாய் எனை உனதாக்கி
மத்திகிரி 18-1-18, மதியம் 2.45