Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 826

$
0
0

826 This is enough

This is enough for me here (on this earth)
What else is there for me to say to you?
You should do this miracle of
Living each day with you

There is no place of tiredness here
The situation won’t overcome me
There is nothing on this earth
Which could separate me from you?

Understanding the purpose
Giving this each day life by you
Living each second in you
My mind should overcome this world

Not thinking any more about
Any work as small or big
My buddhi should realize that
All that I do is only for you

I realized the purpose of coming to this world
Along with it I understood the purpose of living
At the end I will attain you by doing
Everything properly

Till then to run each day
You should bestow the grace as before
Receiving it joyfully
I should live each day like this

Mathigiri, 13-2-18, (14-2-18) இரவு 12.15

Another song thinking about the blessing living each day by doing everything for the Lord.

826 இது போதும்

இதுஒன்று போதும் இங்குஎனக்கு
வேறென்ன சொல்ல நானினி உனக்கு
அனுதினம் உன்னுடன் வாழ்ந்திடும் இந்த
அதிசயம் செய்யணும் நீயும் எனக்கு

சோர்வுக்கு இங்கு இடம் கிடையாது
சூழ்நிலை என்னை மேற்கொள்ளாது
உன்னைவிட்டு என்னைப் பிரிக்கும்
ஏதும் உலகில் இனி கிடையாது

தருகின்ற அனுதின வாழ்வை நானும்
நீ தருவதின் நோக்கம் அறிந்து
ஒவ்வொரு நொடியும் உன்னுள் வாழ்ந்து
உலகை வெல்லணும் எனது மனது

சிறியது பெரியது என்று நான்
செயலை இனி எண்ணிடாமல்
எது செய்தாலும் எல்லாம் உனக்கு
என்பதை உணரனும் எனது அறிவு

வந்ததின் நோக்கம் நானும் அறிந்தேன்
வாழ்வதின் நோக்கம் அதனுடன் புரிந்தேன்
இறுதிவரையில் நன்கு செய்து முடித்து
உன்னை நிச்சயம் நானும் அடைவேன்

அதுவரை நானும் அனுதினம் ஓட
அருளணும் நீயும் முன்போல் அருளை
அதனை அடைந்து நான் உவகையோடு
வாழணும் இதுபோல் நாளும் வாழ்வை

மத்திகிரி, ௧13-2-18, (14-2-18) இரவு 12.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles