Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 827

$
0
0

827 I worship your Holy feet

I bowed at your feet
To take them on my head
I sought God
To receive grace
I get wet in bhakti
To attain mukti
I rejoice in singing
To grow in bhakti

There is no hurdle
To receive grace
There is no disturbance
To understand love
There is no language
To sing your praises
I lived for you
There is no shortcoming in it

Thousands of reasons are there
For me to live
But there are shortcomings
In it
Finally when I
Sought completeness
I received it
By reaching you

Can I found?
Any other reason
Once you came
Seeking after me
Once I gave me
After receiving you
Can I find any shortcoming?
In it?

I will bow to you with whole heart
By taking your feet on my head
Filled both in
Mind and thought
And singing
Your praises
Living this day
For you

Mathigiri, 14-2-18, 4.50௦ a.m.

As I got up very in the morning when I sat for worship I wrote this song to praise the Lord to live each day in him.

827 திருவடிப் பணிந்தேன்

திருவடிப் பணிந்தேன்
தலையினில் சூட
தெய்வத்தைத் தேடினேன்
அருளினை நாட
பக்தியில் நனைந்தேன்
முக்தி அடைய
பாடியே மகிழ்ந்தேன்
பக்தியில் வளர

அருளினை அடையத்
தடையேதும் இல்லை
அன்பினை உணர
இடையூறும் இல்லை
உன்புகழ் பாட
மொழிகளும் இல்லை
உனக்கென வாழ்ந்தேன்
குறைகளும் இல்லை

ஆயிரம் காரணம்
உள்ளன வாழ்ந்திட
ஆயினும் அவற்றுள்ளும்
குறைகளும் உள்ளன
இறுதியில் நிறைவை
நாடியே போது
அடைந்தேன் அதனை
உன்னிடம் வந்து

இதனினும் காரணம்
வேறேதும் காண்பேனோ
என்னைநீ தேடியே
வந்திட்ட பின்னே
உன்னையே அடைந்து
எனத்தந்த பின்னே
குறையேதும் அதில்
இனி காண்பேனோ

மனமொழி வாக்கில்
மீண்டுமே நிறைந்து
மனத்தார உன்புகழ்
பாடியே பணிந்து
இன்றைய நாளில்
உனக்கென வாழ்ந்து
இணையடி சூடுவேன்
உளமாறப் பணிந்து

மத்திகிரி, 14-2-18, காலை, 4.50௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles