Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 828

$
0
0

828 I gave me

No need to have
Anger or irritation against anyone
There is no need to
Have hate or enmity with anything

You called me
To live in you
If I understood it through my buddhi
That is enough

I knew you
To have fellowship with you
I live with you
To accomplish your will

When you
Refine me for this
I will surrender
Not saying anything

In order have
Holiness in mind
You gathered the wastes
To set them on fire

In order to have
Truth both in and out
You washed me
By removing the dirt

You gave new life
As a refined gold
You removed
Frustration and lamentation

You asked me
To run towards you
You asked me
To remove unnecessary burden

I am not
Anger with any one
There is no place
For hatred on anything

There is no confusion
In the life that I am living
Once I understood this
There is no shortcoming in it

I will live celebrating
Worshiping you
I will rejoice
By proclaiming your fame

For that
I gave me to you
I will uplift you
Oh my Lord

Mathigiri, 14-2-18, 5.15 a.m.

After writing the previous song (827) as I continue to worship the Lord, I realized the way he refine us by removing several unwanted thoughts of anger, hate, depression, enmity etc. so that we can worshiping him meaningfully. As I continue to meditate, as the inspiration came I wrote this song.

828 தந்தேன் என்னை

எவர்மீதும் கோபமோ
எரிச்சலோ வேண்டாம்
எதன்மீதும் வெறுப்போ
பகையோ வேண்டாம்

உனக்குள்ளே வாழ
எனைநீ அழைத்தாய்
அதையே அறிவால்
அறிந்தால் போதும்

உன்னையும் அறிந்தேன்
உறவாடி மகிழ
உன்னுடன் வாழ்ந்தேன்
உன்சித்தம் நிகழ

இதற்கென என்னைநீ
புடம்மிடும் போது
என்னையே தருவேன்
ஏதும் சொல்லாது

சிந்தையில் தூய்மை
நிறைந்திட வேண்டி
தீயிட்டுக் கொளுத்தினாய்
குப்பையைக் கூட்டி

அகத்திலும் புறத்திலும்
உண்மையே வேண்டி
அலசியே துவைத்தாய்
அழுக்கினைப் போக்கி

புடமிட்ட பொன்னாய்ப்
புதுவாழ்வு தந்தாய்
புலம்பலைத் தவிப்பை
போக்கிட வைத்த்தாய்

உன்னையே நோக்கி
ஓடிடச் சொன்னாய்
உதவாத சுமைகளை
நீக்கிடச் சொன்னாய்

எவர்மீதும் கோபம்
இனியெனக் கில்லை
எதன்மீதும் வெறுப்புக்கும்
இடமினி இல்லை

இனிவாழும் வாழ்வில்
குழப்பமும் இல்லை
இதையும் அறிந்தபின்
குறையேதும் இல்லை

கும்பிட்டு வாழ்வேன்
கொண்டாடி உன்னை
கூறியே மகிழ்வேன்
உன்புகழ் தன்னை

அதற்கெனத் தந்தேன்
நானுமே என்னை
அதன்மூலம் உயர்த்துவேன்
ஐயனே உன்னை

மத்திகிரி, 14-2-18, காலை 5.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles