Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 829

$
0
0

829 I forgot what I told

Somehow I forgot what I told (you)
I lost the strength to accomplish what I told
Though I knew your will for me
Somehow I forgot it—somehow….

Many questions that come continuously
Along with them, the confusion which comes
Added to them as my original nature mingle
As this wavering mind get depressed—somehow

As I couldn’t get what I was expecting
As only disappointment alone remained
As my heart only longs for
What you have promised to give—Somehow….

I don’t have patience for your time to come
Though I lived with you every day I found some emptiness
Though I am not qualified to receive
Forgetting that as I sought to receive—Somehow…

I told that I am the clay on your hand
I told that I am your slave
I told that I am only living for you
But forgetting all these promises which I gave—somehow….

I know that this is not new to me
I realized that this is my condition
I don’t know the way to overcome it
I came only tell this to you—somehow…

Mathigiri, 15-2-18, 10.30௦ p.m.

I often expect God to remain steadfast in his promises which he gave. Of course he remains steadfast. But as I don’t have patience to wait for his time to give as per his promise, I easily forgot all that I promised to him. This is of course is my nature and this song is that lamentation.

829 சொன்னதை மறந்தேன்

சொன்னதை ஏனோ மறந்துவிட்டேன்
சொன்னதைச் செய்யும் திறன் இழந்தேன்
எனக்கென நீ கொண்ட சித்தத்தை அறிந்தும்
ஏனோ அதனை நான் மறந்தேன்—சொன்னதை….

அடுக்கடுக்காய் வரும் பலவிதக் கேள்விகள்
அவற்றுடன் வந்திடும் பலவிதக் குழப்பங்கள்
இவற்றுடன் இயல்பான எண்குணம் சேர
அலைபாயும் மனமும் மீண்டுமே சோர—சொன்னதை…

எதிர்பார்த்து வந்தது இல்லாமல் போதால்
ஏமாற்றம் மட்டுமே எஞ்சியே நின்றதால்
தருகிறேன் என்றுநீ சொன்னதை மட்டுமே
என்மனம் எதிர்பார்த்து மீண்டுமே நின்றதால்—சொன்னதை

உன்நேரம் வரும்வரை எனக்கில்லை பொறுமை
உன்னுடன் தினம் வாழ்ந்தும் கண்டேனே வெறுமை
பெறுகிற தகுதி இல்லாத போதும்
அதைப்பற்றி எண்ணாமல் நானுமே விழைந்ததால்—சொன்னதை

உன் கையின் மண் என்றேன்
உனக்கடிமை நான் என்றேன்
வாழ்வதே உனக்கென்றேன்
தந்த வாக்கினை நான் மறந்து—சொன்னதை….

இதுவும் புதிதல்ல எனநான் அறிவேன்
இதுவே என்நிலை என்பதை உணர்வேன்
இதனை மேற்கொள்ள வழியும் அறியேன்
இதையே சொல்லிட உன்னிடம் வந்தேன்—சொன்னதை….

மத்திகிரி, 15-2-18, இரவு 10.30௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles