964 you made me to understand
By living in my heart
You talked with me
By dwelling in my sense
You inspired me
By remaining in my thought
You are over lording me
By remaining with me
You become mine
I searched you
In the sense in my heart
Through my thought
I only sought you
As you become mine
I gave me to you
All these are
Because of your grace
In human life
Which has a physical body?
In order to
Experience your grace
By giving the body and mind
Along with senses
You helped me to realize
In this life on earth
By remaining
Part of everyday’s life
By filling in
All its need
Experiencing it
Both in and out
Oh my Lord I joined you
By mingling with you
Not standing
In a distance
Not remaining hidden
Because your god
In the body’s movements
And in my thought
You came along with me
By mingling with me
Though you came
As man-god
Though you lived as
Human god
In order to know you
In human life
You mingled with
Sense and body
Hating the world
By saying it as Maya
Denying the body
Thinking it mere dust
By coming on this earth
You helped us to understand
The greatness of
Both of them
Mathigiri, 12-9-2018, 11.30 p.m.
One of the blessings in following the Lord is that we need not hate this world as Maya or despise our body as mere dust. By coming to the world in human form he helped us to understand the goodness in both of them.
964 புரியவைத்தாய்
உள்ளத்தில் வாழ்ந்து
என்னுடன் பேசினாய்
உணர்வில் இருந்து
என்னையும் தூண்டினாய்
எண்ணத்தில் இருந்து
என்னையும் ஆண்டாய்
என்னுடன் இருந்து
என்வசம் ஆனாய்
உள்ளத்தின் உணர்வில்
உன்னையும் தேடினேன்
எண்ணத்தின் எண்ணத்தில்
உன்னையே நாடினேன்
என்வசம் ஆனதால்
என்னையே தந்தேன்
இவையாவும் உனது
அருளினால் என்றேன்
ஊனுடல் கொண்ட
மானுட வாழ்வில்
உன்னருள் தன்னை
உணர்ந்திட வென்று
உடலோடு மனதையும்
உணர்வுடன் தந்து
உலக வாழ்விலே
உணர வைத்தாய்
அனுதின வாழ்வின்
பகுதியாய் இருந்து
அதனின் தேவைகள்
அனைத்திலும் நிறைந்து
அகம்புறம் இரண்டிலும்
அதனை உணர்ந்து
ஐயனே ஒன்றினேன்
உன்னுடன் இணைந்து
தூரமே விலகி
நின்று விடாமல்
தெய்வம் என்பதால்
மறைந்து நில்லாமல்
உடலின் அசைவில்
உள்ளத்தின் நினைவில்
ஒன்றாய்க் கலந்து
உடன்நீ வந்தாய்
தெய்வமே மனிதனாய்
வந்திட்ட போதும்
மனித தெய்வமாய்
வாழ்ந்திட்ட போதும்
மனித வாழ்வில்
மனிதன் அறிய
உடலொடு மனதின்
உணர்வில் கலந்தாய்
மாயை என்று
உலகை வெறுத்து
மண்தான் என்று
உடலை மறுத்து
வாழும் உலகில்
இரண்டின் மேன்மை
வந்து காட்டிப்
புரியவைத்தாய்
மத்திகிரி, 12-9-2018, இரவு, 11.30