405 No chance
Though we try to escape to hide
The world is not ready to allow us to do so
It won’t let us live in peace till
It search to find us to give trouble
We may have thousands of reasons to hide
But where is the time for others to understand it
As their own needs press them
They might come to us searching after us
Even if we manage to find a place to hide
Our own mind will betrays us
As it have thousands of needs of its own
What is the use of hiding physically?
As long as we have a mind
There is no point in hiding physically
Even though the mind would like to hide
There is no place for it to do so
Before others come and find us
Our mind will go ahead of them
By its own activity it will show our hiding place
And will laugh at us joining others
Once we came to this world
There is no place to hide anywhere
As long as we have a mind
There is no chance for that
Mathigiri, 17-1-18, இரவு 11.50
As a sannyasi I want to hide from the world. But my mind and heart are the culprits which disclose to others. As long as we have a mind and heart it is impossible to hide from anyone—even from ourselves.
405 வாய்ப்பே இல்லை
ஓடி ஒளிய விரும்பியே போதும்
உலகம் நம்மை விடுவதாய் இல்லை
தேடித் துருவிக் கண்டுபிடித்து
தொல்லை தராமல் இருப்பதும் இல்லை
ஒளியைக் காரணம் ஆயிரம் இருக்கும்
உணர பிறருக்கு ஏது நேரம்
அவரது தேவை பலவிதம் நெருக்க
நம்மைத் தேடி வந்திடக் கூடும்
உடலால் ஒளிய இடம் கிடைத்தாலும்
உள்ளமோ நம்மை காட்டியே கொடுக்கும்
அதனின் தேவைகள் ஆயிரம் இருக்க
உடலால் ஒளிந்து இனியென்ன இலாபம்
மனமொன்ற ஒன்று இருக்கும் வரையில்
உடலால் ஒளிந்து பயனே இல்லை
மனதுக்கும் ஒளிய மனமிருந்தாலும்
மறைய அதற்கு இடமே இல்லை
பிறர்வந்து நம்மைத் தேடும் முன்னே
மனமும் அவரை முந்திக் கொள்ளும்
தானே அசைந்து காட்டிக் கொடுத்து
பிறருடன் சேர்ந்து எள்ளி நகைக்கும்
ஒருமுறை உலகில் வந்த பின்னே
ஒளிந்திட எங்கும் இடமே இல்லை
மனமொன்று நாமிடம் இருக்கும் வரையில்
அதற்கு என்றும் வாய்ப்பே இல்லை
மத்திகிரி, 17-1-18, இரவு 11.50