316 Wrote the song
To keep you always ahead of me
And your grace to lead me
I give myself to you—O my God
You abide with me.
I came with much enthusiasm (so that)
My joy will overflow
And my interest to increase—O my Master
You too come with me.
Your grace to guide me
And your Veda to give company to me
I worshiped you with much joy—O my Companion
You accept this with joy.
To join with bhaktas
To worship with songs
I wrote new song—O my First one
You protect me with concern
However I glorify you
However I praise you
I always remain your slave—O my Lord
You lord over me and give your grace.
28-7-15, Mathigiri, 11.10 pm.
Most of my songs are very depressive, as I often write about my failures, struggle, etc. Too much lamentation about life not only spoils one’s mood but also others. When I thought about this, then I said, ok, let me write a song with a joyful note. Then I wrote this song.
316 பாடல் புனைந்தேன்
உன்னையே முன்நிறுத்த
உன்கிருபை வழிநடத்த
என்னையே தந்தேனே நான்–என் இறைவா
என்னுடன் நீ இருப்பாயப்பா
ஆனந்தம் மேலிடவே
ஆர்வமும் பொங்கிடவே
ஊக்கமுடன் வந்தேனே நான்–என் தலைவா
உடன் நீயும் வருவாயப்பா
உன்னருளும் வழிகாட்ட
உன்வேதம் துணைக் கூட்ட
உவந்தே தொழுதேனே நான்–என் துணைவா
உவப்புடன் ஏற்பாயப்பா
தொண்டருடன் கூடிக்கொள்ள
தொழுது உன்னைப் பாடிக்கொள்ள
புதியபாடல் புனைதேனே நான்–என் முதல்வா
பரிவுடன் காப்பாயப்பா
என்ன சொல்லிப் போற்றினாலும்
ஏது சொல்லி வாழ்த்தினாலும்
என்றும் அடிமையானேனே நான்–என் ஆண்டவா
ஆட்கொண்டு அருள்வாயப்பா
28-7-15, இரவு 11.10