446 Time to say ‘Good-bye’
Time to say ‘good-bye’ should come quickly
And should come an end to this unnecessary pain
I don’t have any more expectation from you
Until I come unto your presence
Once I received the fruit of this birth
I find no meaning for this life on earth
Not get perished along (or with) this world
I will rejoice in the New Life that I received
I have done (at my best) what you gave as responsibility
As the struggles came to an end I wanted take rest
And completing the race which I began unto the goal
I will get that reward completing it easily
All the unnecessary burden have gone automatically
And those things came behind me also disappeared
Once I completed the race keeping you in front of me
All other things disappeared, other than you
Once you know this longing of mine
What is the reason for delaying further?
Whatever might be your will?
What is your response (to my question) tell that now
What is there for me to do living further?
(What I am going to do living further)
What is your will tell me that to me now
Till now I never went against your will
Anyhow as long as you want keep, I will do the same again
Mathigiri, 15-6-16, 11.45 pm.
After completing my reading, as I sat for my prayer/quite time, I thought that as I achieved the purpose of this life: Knowing Him and Known by Him, I said that there is no more expectation further in my life. So it is correct time to go. Of course God might have His purpose or will for my life, but I thought, ‘so what’. This is the right time to go and I prayed to God to take me. Then I wrote this poem as my prayer.
446 விடைபெற வேண்டும்
விடைபெறும் நேரம் சீக்கிரம் வரவேண்டும்
வேண்டாத வேதனை முடிவுக்கு வரவேண்டும்
எவ்வித எதிர்ப்பார்ப்பும் இனியில்லை என்னில்
உன்சன்னிதிக்கு நான் வருகின்ற வரையில்
பிறந்த பயனைப் பெற்ற பின்னாலே
புவியின் வாழ்விலே அர்த்தம் காணேனே
புவியின் வாழ்வோடு அழிந்தே போகாமல்
பெற்ற புதுவாழ்வில் புகுந்து மகிழ்வேனே
பொறுப்பெனத் தந்ததைச் செய்து முடித்தேனே
போராட்டம் ஓய்ந்ததால் இளைப்பாற நினைத்தேனே
இலக்கை நோக்கித் தொடங்கிய ஓட்டமும்
எளிதாய் முடித்துப் பரிசைப் பெறுவேனே
பின்னான பாரமெல்லாம் தன்னாலே போச்சு
பின்பாக வந்ததெல்லாம் மறைந்துமே போச்சு
உன்னையே முன்நிறுத்தி ஓடியே முடித்தபின்னே
உனையின்றி மற்றவையும் மறந்துமே போச்சு
என்னிந்த வேட்கை நீயறிந்த பின்னாலே
வீணாகத் தாமதம் செய்வதும் எதனாலே
உன்சித்தம் எதுவானால் அதைப்பற்றி என்ன
என்கேள்வி அதற்கு பதில்மட்டும் என்ன
இன்னும் இருந்துதான் எதைச்செய்ய வேண்டும்
என்ன உன்சித்தம் அதைக்கூற வேண்டும்
இதுவரை உன்சித்தம் மீறி அறியேனே
எதுவரை வைத்தாலும் அதையே செய்வேனே
மத்திகிரி, 15-6-16, இரவு 11.45